Short News

தேவைப்பட்டால் மக்களவை தேர்தலில் போட்டி: கமல்!

தேவைப்பட்டால் மக்களவை தேர்தலில் போட்டி: கமல்!

2019 மக்களவை தேர்தலில் தேவைப்பட்டால் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் சூழ்நிலையில், புதிதாக அரசியல் கட்சி தொடங்கி இருக்கும் ரஜினி மற்றும் கமல் இந்த தேர்தலில் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த கதாப்பாத்திரம் கிடைத்தது என் அதிர்ஷ்டம்: சரண்யா!

இந்த கதாப்பாத்திரம் கிடைத்தது என் அதிர்ஷ்டம்: சரண்யா!

வித்தியாசமான அம்மாவாக நடித்தத்தில் மகிழ்ச்சியடைவதாக நடிகை சரண்யா தெரிவித்துள்ளார். ராகேஷ் இயக்கத்தில் மீண்டும் எப்போதும்போல அம்மாவாக நடித்திருக்கிறார் சரண்யா. இந்நிலையில் படபிடிப்பின்போது சரி, டப்பிங் பேசும்போதும் சரி இந்த கதாப்பாத்திரத்தில் இருக்கும் வித்தியாசத்தை உணர முடிந்ததாகவும் சரண்யா கூறியுள்ளார்.
நிஜத்தில் 'விஸ்வரூபம்' எடுப்பேன்- கமல் பகீர்!

நிஜத்தில் 'விஸ்வரூபம்' எடுப்பேன்- கமல் பகீர்!

கமலின் 'விஸ்வரூபம் 2' படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் கமலும் ஆண்ட்ரியாவும் பயிற்சி பெறும் காட்சிகள் சென்னை ராணுவ பயிற்சி கல்லூரியில் படமாக்கப்பட்டது. இந்த படம் ரிலீஸ் தொடர்ந்து அங்கு சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது அங்கே விஸ்வரூபம்-3 வருமா? என்று கமலிடம் கேட்டதற்கு சினிமாவில் இல்லை. நிஜத்தில் தான் விஸ்வரூபம்-3 எடுக்க போகிறேன்" என்றார்
டெக்னோவில் ரூ.6,799க்கு அட்டகாசமான ஸ்மார்ட்போன்!

டெக்னோவில் ரூ.6,799க்கு அட்டகாசமான ஸ்மார்ட்போன்!

டெக்னோவின் இரண்டு ஸ்மார்ட்போன்கள் மலிவு விலையில் நேற்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன்களில் ஃபேஸ் அன்லாக் என்ற புதிய வசதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், குவாட்கோர் மீடியாடெக் சிப்செட் தொழில்நுட்பம், 6.0 இன்ச் ஹெச்.டி. 2 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ, 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்பி கேமரா, கைரேகை சென்சார் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more