Short News

'மேற்குத் தொடர்ச்சி மலை': இதுதான் யதார்த்தம்!

'மேற்குத் தொடர்ச்சி மலை': இதுதான் யதார்த்தம்!

இதுதான் உண்மையான யதார்த்த திரைப்படம் என்பதை 'மேற்குத் தொடர்ச்சி மலை' மூலம் நிரூபித்துள்ளார் இயக்குனர் லெனின் பாரதி. மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்திலிருந்து தினமும் ஏலக்காய் மூட்டை சுமந்து செல்லும் ஒருவரின் வாழ்க்கைப் பயணமே இப்படத்தின் கதை. படத்தின் உணர்வுகளை மேலும் மேலும் தூண்டிவிட இசைஞானி இளையராஜாவைத் தவிர யாரால் முடியும்? ஒரு தயாரிப்பாளராக இப்பட வெற்றியின் மூலம் சாதித்துள்ளார் விஜய் சேதுபதி.
#INDvsBAN வெற்றியை நோக்கி இந்தியா! IND 146/2 (31)

#INDvsBAN வெற்றியை நோக்கி இந்தியா! IND 146/2 (31)

துபாயில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் சூப்பர்-4 சுற்றின் இந்தியாவுக்கு எதிரான முதலாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணி 49.1 ஓவர்களில் 173 ரன்களில் சுருண்டது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, 31 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்துள்ளது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ரோகித் ஷர்மா 77 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.
இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 174 ரன்கள்!

இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 174 ரன்கள்!

துபாயில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் சூப்பர்-4 சுற்றின் இந்தியாவுக்கு எதிரான முதலாவது போட்டியில் வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் வங்கதேசம் 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 173 ரன்களில் சுருண்டது. இதில், அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார், பும்ரா தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
ரவிக்கு ஜோடியாகும் காஜல்!

ரவிக்கு ஜோடியாகும் காஜல்!

வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் ஜெயம் ரவி நடிக்க இருக்கிறார், அடங்க மறு படத்தை தொடர்ந்து தனிஒருவன் -2 படத்தில் ஜெயம் ரவி நடிக்க இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதனின் படத்திலும் அவர் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் நடிக்கிறார்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more