Short News

ஊட்டி அருகே மிதுன் ரெசார்ட்டுக்கு சீல்!

ஊட்டி அருகே மிதுன் ரெசார்ட்டுக்கு சீல்!

நீலகிரி மாவட்டத்தில் யானைகள் நடமாடும் வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 11 கட்டடங்களுக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது. அவற்றில் பெரும்பாலானவை ரெசார்ட் விடுதிகளாகும். அந்த ரெசார்ட்டுகளில், ஹிந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்தியின் ரெசார்ட்டும் ஒன்றாகும். இப்பகுதிகளில் 27 விடுதிகள் கடந்த 12ஆம் தேதியே சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தேனி கூட்டத்தில் ஓபிஎஸ்!  சேலத்தில் ஈபிஎஸ்!

தேனி கூட்டத்தில் ஓபிஎஸ்! சேலத்தில் ஈபிஎஸ்!

இலங்கை இறுதிப்போர் விவகாரத்தில் காங்கிரஸ், திமுகவை போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் தேனியில் நடைபெறும் கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், சேலத்தில் நடக்கும் கூட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி பங்கேற்க உள்ளனர்.
பிஸ்பாஸில் இது எனக்கு கிடைக்காது- கமல்!

பிஸ்பாஸில் இது எனக்கு கிடைக்காது- கமல்!

மக்களை சந்திப்பதற்காக திருப்பூர் மாவட்டத்தில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், "நேரில் உங்களையெல்லாம் சந்திக்கும் மகிழ்ச்சி, பிக்பாஸிலும் சினிமாவிலும் கிடைக்காது, நம் மாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டும், கிராம சபை கூட்டங்களுக்கு பொதுமக்கள் தவறாமல் செல்ல வேண்டும், படித்த இளையதலைமுறையினர் கிராமம் நோக்கி நகர வேண்டும்" என்று கூறினார்.
சீன ஓபன் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறினார் சிந்து!

சீன ஓபன் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறினார் சிந்து!

ஜங்சௌ நகரில் நடைபெற்று வரும் சீன ஓபன் பேட்மிண்டன் தொடரின் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் பி,வி,சிந்து தாய்லாந்து வீராங்கனை புஷாணுடன் மோதினார். இதில் 23-21, 21-13,21-18 என்ற செட் கணக்கில் புஷாணணை வீழ்த்தி, காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் பி.வி,சிந்து!
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more