Short News

நெட்டிசன்களிடம் சிக்கி கொண்ட பிரபல நடிகரின் மனைவி!

நெட்டிசன்களிடம் சிக்கி கொண்ட பிரபல நடிகரின் மனைவி!

முன்னணி பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூரின் மனைவி மீரா ராஜ்புட். இவர் சமீபத்தில் விளம்பரம் ஒன்றில் நடித்தார்.  இவர் அந்த விளம்பரத்தில் கெமிக்கல்களால் செய்யப்பட்ட அழகு பொருட்களை விளம்பரப்படுத்தியுள்ளார். சமீபத்தில் ஒரு பேட்டியில் நான் இயற்கையான அழகு சாதன பொருட்களை தான் பயன்படுத்துவேன் என கூறியதால் தற்போது நெட்டிசன்களிடம் மாட்டிக்கொண்டார். 
சலசலப்புகளுக்கு அஞ்சமாட்டேன்- மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

சலசலப்புகளுக்கு அஞ்சமாட்டேன்- மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், "தலைவர் கருணாநிதியை இழந்த திமுகவில் என்ன நடக்கிறது என்பதில் நம்மைவிட எதிரிகளுக்குதான் அதிக அக்கறை, ஈறைப் பேனாக்கி, பேனைப் பெருமாள் ஆக்கலாமா என நப்பாசை கொண்டிருக்கிறார்கள், சலசலப்புகளுக்கு அஞ்சமாட்டேன்! திமுகவின் உள்ளும் புறமும் உள்ள சவால்களை வென்று காட்டுவேன்" என்றார்.
டேனி, மகத் சண்டையை பார்த்து காரி துப்பிய ரசிகர்கள்!

டேனி, மகத் சண்டையை பார்த்து காரி துப்பிய ரசிகர்கள்!

பிக் பாஸ் 2 நிகழ்ச்சி, போட்டியாளர்கள் அனைவரும் நடித்து கொண்டிருப்பதால் பார்வையாளர்களுக்கு பிடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதில், டாஸ்க் என்ற பெயரில் குழாய் அடி ஏற்படுத்தி வருகின்றனர். இதில், நேற்று டேனி, மகத்திடையே கடும் மோதல் ஏற்படுவது போன்று ப்ரொமோ வெளியானது. ஆனால் இரவு நிகழ்ச்சியை பார்த்தவர்கள் சும்மா சவுண்டு மட்டும்தான் என்று சொல்லி பிக் பாஸை பார்த்து ரசிகர்கள் காரிதுப்பி வருகின்றனர்
வைகை எக்ஸ்ப்ரஸுக்கு வயது 40!

வைகை எக்ஸ்ப்ரஸுக்கு வயது 40!

தென் மாவட்ட மக்களை சென்னையுடன் சேர்க்கும் முதல் முக்கிய 'பாலமாக' இருப்பது வைகை விரைவு ரயில் என்றால் அது மிகையல்ல. இந்த வைகை எக்ஸ்ப்ரஸ் தன் பயணத்தைத் தொடங்கி 40 ஆண்டுகள் ஆகிவிட்டது. கடந்த 1977ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி மதுரையில் அறிமுகம் செய்யப்பட்டது வைகை எக்ஸ்ப்ரஸ். அப்போதிலிருந்தே மணிக்கு சுமார் 100 கி.மீ. வேகத்தில் அது இயக்கப்பட்டு வருகிறது. Happy Birthday Vaigai Express!
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more