Short News

மமதி சாரியை கட்டிப்பிடிக்க பாய்ந்த கவிஞர் சினேகன்!

மமதி சாரியை கட்டிப்பிடிக்க பாய்ந்த கவிஞர் சினேகன்!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் கட்டிப்பிடி வைத்தியம் செய்து பிரபலமான கவிஞர் சினேகன், விஜய்டிவியில் ஒலிப்பரப்பாகி வரும் 'டிவைடட்' நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகை மமதி சாரியை கட்டிப்பிடிக்க பாய்ந்து அசிங்கப்பட்டுள்ளார். இதில், பிஸ்பாஸ் வீட்டில் செய்வதுபோல் சினேகன் பழக்க தோஷத்தில் மமதியை கட்டிப்பிடிக்க போக அவரோ வணக்கம் சொல்லி எஸ்கேப் ஆகியிருப்பதை ட்ரோல் செய்து வருகின்றனர்
65 மெட்ரிக் டன் மருந்துகள் கேரளாவுக்கு அனுப்பப்பட்டது: நட்டா!

65 மெட்ரிக் டன் மருந்துகள் கேரளாவுக்கு அனுப்பப்பட்டது: நட்டா!

65 மெட்ரிக் டன் மருந்துகள் திருவனந்தபுரத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா தெரிவித்துள்ளார். சுமார் 1 கோடி குளோரின் மாத்திரைகள் கேரளாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக டெல்லியில் கேரள வெள்ள பாதிப்பு குறித்த ஆலோசனை கூட்டத்துக்கு பின் அமைச்சர் ஜே.பி.நட்டா கூறினார்.
கேரளாவுக்கு ரூ.600 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு!

கேரளாவுக்கு ரூ.600 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு நிதியுதவியாக அறிவித்த ரூ.600 கோடி நிதியை மத்திய அரசு விடுவித்தது. இதில்பிரதமர் மோடி அறிவித்த ரூ.500 கோடி மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்த ரூ.100 கோடியை விடுவித்துள்ளதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய உணவு, பொதுவிநியோகத்துறை கேரளாவுக்கு 89,540 மெட்ரிக் டன் அரிசியை கூடுதலாக ஒதுக்கீடு செய்துள்ளது.
கேரளாவுக்கு ரூ.600 கோடி விடுவித்தது மத்திய அரசு!

கேரளாவுக்கு ரூ.600 கோடி விடுவித்தது மத்திய அரசு!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ.600 கோடி நிதியை விடுவித்துள்ளது மத்திய அரசு. பிரதமர் மோடி அறிவித்த ரூ.500 கோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்த ரூ.100 கோடியை விடுவித்தது மத்திய அரசு. முன்னதாக கேரளாவில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more