Short News

தமிழில் ரீமேக்காகும் RX 100!

தமிழில் ரீமேக்காகும் RX 100!

தெலுங்கு சினிமாவில் அர்ஜீன் ரெட்டி படத்தை தொடர்ந்து இளைஞர்களை கவர்ந்த படம் RX 100. அர்ஜீன் ரெட்டி படம் தமிழில் ரீமேக் செய்வது போன்றே தற்போது இந்த படமும் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த படத்தில் ஹீரோவாக நடிகர் ஆதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழிலும் இந்த படம் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.   
குறைந்த விலை 'கூல்பேட் மெகா 5ஏ' ரிலீஸ்!

குறைந்த விலை 'கூல்பேட் மெகா 5ஏ' ரிலீஸ்!

புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனினை இந்தியாவில் கூல்பேட் நிறுவனம் இன்று அறிமுகம் செய்துள்ளது. கூல்பேட் மெகா 5ஏ என்ற பெயரில் வெளிவந்துள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போனில் டூயல் கேமராவுடன் 8 எம்பி ஆட்டோஃபோகஸ் பிரைமரி கேமரா மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.
வாஜ்பாய் மறைந்தாலும் இந்தியர்கள் மனதில் இது மட்டும் மறையாது..!

வாஜ்பாய் மறைந்தாலும் இந்தியர்கள் மனதில் இது மட்டும் மறையாது..!

முன்னாள் பிரதமர் மற்றும் பாஜகவின் மூத்த தலைவரான அடல் பிஹாரி வாஜ்பாய் இன்று இறந்து இருக்கும் நிலையில் அவர் தான் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டவர் என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளம் இங்குப் பதிவு செய்ய விரும்புகிறது.

காங்கிரஸ் அல்லா பிரதமர் ஒருவர் முதன் முறையாக இந்தியாவை 5 ஆண்டுகள் முழுமையாக ஆண்ட பெருமையும் வாஜ்பாயை தான் சேறும்.

சின்னப்பிள்ளை காலில் விழுந்து வணங்கிய வாஜ்பாய்!

சின்னப்பிள்ளை காலில் விழுந்து வணங்கிய வாஜ்பாய்!

கடந்த 2001-ம் ஆண்டு மத்திய அரசு சார்பில் நடைபெற்ற விருது விழாவில், பஸ்த்ரீ ஷக்தி புரஷ்கார் விருதினை மதுரையைச் சேர்ந்த சின்னப்பிள்ளைக்கு மறைந்த பிரதமர் வாஜ்பாய் வழங்கினார். அப்போது, விருது வழங்கும்போது வாஜ்பாய் சின்னப்பிள்ளையின் காலில் விழுந்து ஆசி பெற்றார். இந்த விருது வழங்கும் விழா மேடையில் பேசிய அப்போதைய பிரதமர் வாஜ்பாய், சின்னப்பிள்ளையின் வடிவத்தில் நான் 'ஷக்தி'யைப் பார்க்கிறேன்" என்றார்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more