Short News

யாருக்கு சிவகார்த்திகேயன் 'ஐ லவ் யூ' சொன்னார் தெரியுமா !

யாருக்கு சிவகார்த்திகேயன் 'ஐ லவ் யூ' சொன்னார் தெரியுமா !

அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் 'கனா' படத்தின் இசை மற்றும் டீஸர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. நண்பனுக்காக தனது முதல் தயாரிப்பு படமாக 'கனா' படத்தை தயாரித்துள்ளர் சிவகார்த்திகேயன். சென்னையில் நடைபெற்ற இந்த படத்தின் இசை நிகழ்ச்சியில் அனைவரது முன்னிலையிலும் தன்னுடைய மனைவி ஆர்த்திக்கு சிவகார்த்திகேயன் நன்றி சொன்னது மட்டுமல்லாமல் "ஐ லவ் யூ" சொல்லியுள்ளார். இதைக்கேட்ட ஆர்த்தி ஆனந்த பரவசமடைந்தார்
நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை: ராகுல்!

நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை: ராகுல்!

ரஃபேல் போர் விமான வாங்கியது தொடர்பான விவகாரத்தை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்தால் உண்மைகள் வெளிவரும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். முன்னதாக சமாஜ்வாதியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் இதே கோரிக்கை முன்வைத்து குறிப்பிடத்தக்கது.
கருணாஸ் கைது: சபாநாயகர் தனபால் கடிதம்!

கருணாஸ் கைது: சபாநாயகர் தனபால் கடிதம்!

திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது செய்யப்பட்டது தொடர்பாக அனைத்து எம்எல்ஏக்களுக்கும் சபாநாயகர் கடிதம் அனுப்பியுள்ளார். சர்ச்சைக்குள்ளான முறையில் பேசியதால் கருணாஸ் கைது செய்யப்பட்டுள்ளதாக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் தனபால் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தகவல் தெரிவிக்கும் வகையில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
மோடிக்கு நோபல் பரிசு: தமிழிசை அழைப்பு!

மோடிக்கு நோபல் பரிசு: தமிழிசை அழைப்பு!

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை கொண்டுவந்த பிரதமர் மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு விருது வழங்கப்பட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் மோடிக்கு நோபல் பரிசுக்கு தேர்வாக என்னுடன் அனைவரும் கைகோர்க்க வேண்டும் எனவும் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more