Short News

இவர் தான் பிக்பாஸில் அடுத்த ஜூலி!

இவர் தான் பிக்பாஸில் அடுத்த ஜூலி!

பிரபல தொலைக்காட்சியில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், இந்த நிகழ்ச்சி குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த ப்ரோமோவில் மும்தாஜ் பயங்கரமாக கத்தி கொண்டு இருக்கிறார். அப்போது பேச்சுக்கு இடையில் இவர் தான் தற்போதைய ஜூலி என வைஷ்ணவியை கூறி விடுகிறார். இதனால் வைஷ்ணவி கோபப்படுவது போலவும் ப்ரோமோ முடிவடைகிறது. 
ஆடாத ஸ்மித்திடம் முதலிடத்தை பறிகொடுத்த கோலி!

ஆடாத ஸ்மித்திடம் முதலிடத்தை பறிகொடுத்த கோலி!

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மோசான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய கேப்டன் விராட்கோலி, ஐசிசியின் டெஸ்ட் மேட்மென்கள் வரிசையில் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார். முதல் போட்டியில் சதம் விளாசியதால் ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்தை பின்னுக்கு தள்ளி முன்னேறிய கோலி, தற்போது மீண்டும் பின் தங்கியுள்ளார்.
மழைக் கால நோய்களை தடுக்கும் பெருங்காயம்!

மழைக் கால நோய்களை தடுக்கும் பெருங்காயம்!

பெருங்காயம் மழைக் காலங்களில் வயிற்றில் உருவாகும் விஷ கிருமிகளை அழித்து வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. பெருங்காயத்தை ஆஸ்துமா, ஜலதோஷம் மற்றும் வைரஸ் காய்ச்சல் போன்றவற்றிற்கு மருந்தாக பயன்படுத்தலாம். சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் வாயுக் கோளாறுகளை சரி செய்ய பெருங்காயத்தை பயன்படுத்தினால் போதும். 
உத்தரவுகளை செயல்படுத்தாத தமிழக அரசுக்கு கண்டனம்!

உத்தரவுகளை செயல்படுத்தாத தமிழக அரசுக்கு கண்டனம்!

உள்ளாட்சி தேர்தல் நடத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்தாத அரசு செயலாளர்களான 2 ஐஏஎஸ் அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் செப்டம்பர் 11ல் 2 பேரும் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் நடத்தாத விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்தாத தமிழக அரசுக்கும் உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more