Short News

CCV ட்ரெய்லர் நாளை ரிலீஸ்!

CCV ட்ரெய்லர் நாளை ரிலீஸ்!

மணிரத்னத்தின் 'செக்கச் சிவந்த வானம்' படத்தின் ட்ரெய்லர் நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்புடன் ஒரு புதிய போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஏற்கனவே இப்படத்தின் பல போஸ்டர்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அரவிந்த் ஸ்வாமி, விஜய் சேதுபதி, சிம்பு, ஜோதிகா, அதிதி ராவ் உள்ளிட்ட மேலும் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
கனாவில் சிவகார்த்திகேயன்!

கனாவில் சிவகார்த்திகேயன்!

அருண்காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் கனா படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார். இந்நிலையில் கனா படத்தில் மெக்கானிக் வேடத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. முன்னதாக யார் இந்த தேவதை பாடல் யூடியூபில் வெளியாக வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
லாலுக்கு ஜோடியாகும் கீர்த்தி!

லாலுக்கு ஜோடியாகும் கீர்த்தி!

பிரபல மலையாள பட இயக்குனர் பிரியதர்ஷன் படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கிறார். கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த கடற்படை தளபதியின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து இந்த படம் தயாராக இருக்கிறது. மூன்று வருட இடைவெளிக்கு பிறகு மலையாள படத்தில் கீர்த்தி நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
ராகுலை விரும்பும் பாக்.!

ராகுலை விரும்பும் பாக்.!

காங்., தலைவர் ராகுல் இந்தியாவில் பிரதமராக வேண்டும் என பாகிஸ்தான் விரும்புவதாக பா.ஜ., செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்தார். இவர் நிருபர்களிடம் மேலும் கூறியதாவது:ரபேல் விவகாரத்தில் எந்த தவறும் நடக்கவில்லை. ஆனால் பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என ராகுலும், பாகிஸ்தானும் விரும்புகிறது. மோடியை
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more