Short News

போலீசாரின் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்ட விக்ரமனின் மகன்!

போலீசாரின் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்ட விக்ரமனின் மகன்!

சென்னை தேனாம்பேட்டையில் விக்ரமின் மகன் துருவ் ஓட்டி சென்ற கார் அதிவேகமாக மோதியதில் 3 ஆட்டோக்கள் சேதமடைந்தது. மேலும், படுகாயமடைந்த ஆட்டோ டிரைவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து துருவ் மற்றும் அவரது நண்பர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். விக்ரமின் மகன் துருவ் கைது செய்யப்பட்டு போலீசாரின் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
புனே வங்கியில் ரூ.94 கோடி திருடிய ஹேக்கர்கள்!

புனே வங்கியில் ரூ.94 கோடி திருடிய ஹேக்கர்கள்!

புனேயில் உள்ள கோஸ்மோஸ் கூட்டுறவு வங்கியில் ரூ.94 கோடி ஹேக்கர்கள் கொள்ளையடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 11ம் தேதி முதல் வங்கி வாடிக்கையாளர்களின் விசா மற்றும் ரூபே கார்டு விவரங்களை திருடி வங்கியின் சர்வரை முடக்கி சாமர்த்தியமாக கொள்ளையர்கள் திருடியுள்ளனர். இதில் சில கோடிகளை ஹாங்காங்கில் உள்ள வங்கியில் உள்ள கணக்கிற்கு பணப்பரிமாற்றம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயனங்கள் எப்படி சுத்திகரிக்கப்பட்டது?

ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயனங்கள் எப்படி சுத்திகரிக்கப்பட்டது?

ஸ்டெர்லைட் ஆலையில் ஆர்சனிக், மெர்க்குரி, காட்மியம் எந்த முறை பயன்படுத்தி சுத்திகரிக்கப்பட்டது? என்ற கேள்விக்கு தூத்துக்குடி சுங்கத்துறை ஆணையர் செப்டம்பர் 3ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், தாமிரத்தை சுத்திகரிப்பு செய்த பின் மூலப்பொருளில் இருந்த ரசாயனங்கள் எப்படி சுத்திகரிக்கப்பட்டது? என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டுமென உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நடிகர்கள் அரசியல் வெற்றிடத்தை நிரப்ப முடியாது!

நடிகர்கள் அரசியல் வெற்றிடத்தை நிரப்ப முடியாது!

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், "ஒரு சூரியன் மறைந்ததும் வானத்தில் பல நட்சத்திரங்கள் தோன்ற முயற்சிக்கும், கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரு பெரிய தலைவர்கள் இல்லாத தமிழக அரசியல் களத்தை 50 ஆண்டுகளுக்குப் பிறகு பார்க்கிறோம், தமிழகத்தின் அரசியல் வெற்றிடத்தை சினிமாவில் இருந்து வந்தவரால் நிரப்ப முடியாது" என்றார்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more