டொயோட்டா ஹைகிராஸ் ஃபேஸ்லிஃப்ட் அறிமுக தேதி விபரம் கசிந்தது
ஆட்டோமொபைல்
- 4 hr, 35 min ago
இந்தியாவில் குடும்பப் பயன்பாட்டுக்கான பிரீமியம் கார்களை வாங்க நினைப்பவர்களின் முக்கியத் தேர்வுகளில் ஒன்றாக இருக்கும் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் (Toyota Innova Hycross) காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வரும் நவம்பர் 26ம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, காரின் வெளிப்புறத் தோற்றம் மற்றும் உட்புற வசதிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை எதிர்பார்க்கலாம். மேலும், இந்தியாவின் முதல் E100 எரிபொருளுக்கு இணக்கமான மாடலாகவும் வர இருக்கிறது.