Short News

தள்ளிப்போகும் வடசென்னை ரிலீஸ்!

தள்ளிப்போகும் வடசென்னை ரிலீஸ்!

இயக்குனர் வெற்றிமாறனின் வடசென்னை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பரியில் இருந்து அக்டோபருக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் இழுத்துக்கொண்டு செல்வதால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இரண்டு பாகங்களாக வடசென்னை வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
கருணாஸ் கைது செய்யப்பட்ட அவரது பாதுகாப்புக்கு தான்: பொன்னார்!

கருணாஸ் கைது செய்யப்பட்ட அவரது பாதுகாப்புக்கு தான்: பொன்னார்!

கருணாஸ் கைது செய்யப்பட்டது அவரது பாதுகாப்புக்காக கூட இருக்கலாம் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசியது, கொலை மிரட்டல் விடுத்தது, சாதிய கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கருணாஸ் மீது கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ரஃபேல் விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும்: அகிலேஷ்!

ரஃபேல் விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும்: அகிலேஷ்!

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும் என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக கருத்து தெரிவித்த அகிலேஷ், கூட்டுக்குழு விசாரிக்காவிட்டால் இந்த விவகாரத்தில் உண்மைகள் வெளிவராது எனக் கூறினார். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் தற்போது கையில் எடுத்துள்ளன.
சூழலை பொறுத்து ராஜா கைது செய்யப்படுவார்: ஓபிஎஸ்!

சூழலை பொறுத்து ராஜா கைது செய்யப்படுவார்: ஓபிஎஸ்!

சட்டப்படியான சூழல் இருந்தால் ஹெச்.ராஜா கைது செய்யப்படுவார் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். முன்னதாக விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் காவல்துறை அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ராஜா, உயர்நீதிமன்றத்தை அவமரியாதையாக பேசினார். போலீஸ் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதாகவும் பேசிய வீடியோ வெளியாக வைரலானது குறிப்பிடத்தக்கது.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more