Short News

அமேசான் பிரைம் டே 2026: அதிரடி சலுகைகள் இதோ!

அமேசான் பிரைம் டே 2026: அதிரடி சலுகைகள் இதோ!

Get ready for Amazon Prime Day 2026 with these exclusive bank offers and shopping hacks. அமேசான் பிரைம் டே விற்பனையில் எஸ்பிஐ மற்றும் ஆக்சிஸ் வங்கி கார்டுகளைப் பயன்படுத்தி அதிக தள்ளுபடியைப் பெறுவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
அடேங்கப்பா... பெங்களூருவில் 25 லட்சம் தனியார் கார்கள்!!

அடேங்கப்பா... பெங்களூருவில் 25 லட்சம் தனியார் கார்கள்!!

போக்குவரத்து நெரிசல் பிரச்னையால் படாத பாடுபட்டு  வரும் பெங்களூரு, தற்போது இந்தியாவிலேயே அதிக தனியார் கார்கள் பதிவு செய்யப்பட்ட நகரமாக மாறியுள்ளது. கர்நாடக போக்குவரத்துத் துறையின் 'வாகன்' (VAHAN) வாகனப் பதிவு தரவுகளின்படி, நகரில் தனியார் கார்களின் எண்ணிக்கை 25 லட்சத்தை கடந்துள்ளது.
சிறந்த 'லைட் வெயிட்' எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!

சிறந்த 'லைட் வெயிட்' எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கும்போது பெரும்பாலானோர் முதலில் பேட்டரி ரேஞ்ச், விலை மற்றும் சார்ஜிங் நேரத்தையே கவனிக்கிறார்கள். ஆனால், தினமும் அலுவலகம், கல்லூரி அல்லது நகரத்திற்குள் பயன்படுத்தும் எடை அதிகமுடைய ஸ்கூட்டர்கள் பலருக்கு அசௌகரியத்தையும், உடல் சோர்வையும் ஏற்படுத்துகின்றன. குறிப்பாக போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலைகளில் அடிக்கடி நிறுத்தி, மீண்டும் இயக்க வேண்டிய சூழலில் அதிக எடை கொண்ட ஸ்கூட்டர்களை கையாள்வது சிரமமாக இருக்கும். அதனால், இப்போது மைலேஜ் மற்றும் விலையைப் போலவே ஸ்கூட்டரின் எடையையும் கவனித்து வாங்குவது அவசியமாகியுள்ளது. பார்க்கிங் செய்வது, யூ-டர்ன் எடுப்பது, சென்டர் ஸ்டாண்ட் போடுவது போன்ற அன்றாட செயல்களில் லைட் வெயிட் ஸ்கூட்டர்கள் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகின்றன.
குறைவான விலையில் விரைவில் வரும் புதிய ஏத்தர் ஸ்கூட்டர்!

குறைவான விலையில் விரைவில் வரும் புதிய ஏத்தர் ஸ்கூட்டர்!

இந்தியாவின் எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள ஏத்தர் எனர்ஜி (Ather Energy, தற்போது அதிக வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு புதிய பட்ஜெட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. 'EL' என்ற புதிய பிளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்த ஸ்கூட்டர் குறித்து தொடர்ந்து புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.