Short News

கேரளாவில் 316% அதிகம் பெய்த மழை: மிரட்டும் புள்ளிவிவரம்!

கேரளாவில் 316% அதிகம் பெய்த மழை: மிரட்டும் புள்ளிவிவரம்!

கேரளாவில் இந்த ஆண்டு பெய்த தென்மேற்குப் பருவமழை, 2,000க்கும் அதிகமான கிராமங்களைப் புரட்டிப் போட்டுள்ளது. இதுவரை 30 பேர் மழை-வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்துள்ளனர். வரும் 14ஆம் தேதி வரை கனமழை தொடரும் என அறிவித்துள்ள வானிலை மையம், கடந்த 8ஆம் தேதி நிலவரப்படி தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விட 316 சதவிகிதம் அதிகமாகப் பெய்துள்ளதாக அறிவித்துள்ளது.
திருப்பதியில் மகா கும்பாபிஷேகம்!

திருப்பதியில் மகா கும்பாபிஷேகம்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் விதித்த கடுமையான கட்டுப்பாடுகளால் பக்தர்கள் வருகை குறைவாக இருந்தது. சிறப்பு யாக பூஜைகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்!

வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்!

பாஜக நிறுவனர்களில் ஒருவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ள வாஜ்பாயிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் அத்வானி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.
சாய்பாபாவின் முழு அருளையும் இன்றைக்கு பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்?

சாய்பாபாவின் முழு அருளையும் இன்றைக்கு பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்?

12 ராசிகளும் ஐம்பூதங்களின் தன்மைக்கு ஏற்ப ஆகாயத்தைத் தவிர, நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகிய நான்கு வகைக்கும் மூன்று மூன்றாகப் பிரிக்கப்படுகிறது. அந்த இயற்கைப் பொருள்களின் தன்மைக்கேற்பவும் கோள்களின் இயக்கங்களுக்கு ஏற்பவும் பலன்கள் கணிக்கப்படுகின்றன. அந்த கோள்களின் இயக்கங்களுக்கு ஏற்ப இயற்கையின் செயல்பாடுகள் மாறும். அதை அடிப்படையான வைத்து கணிக்கப்படுவது தான் ஜோதிடம்.

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more