Short News

பாஸ்போர்ட் சேதமானோருக்கு இலவசமாக புதிய பாஸ்போர்ட்: சுஷ்மா!

பாஸ்போர்ட் சேதமானோருக்கு இலவசமாக புதிய பாஸ்போர்ட்: சுஷ்மா!

கேரளாவில் வெள்ளத்தில் பாஸ்போர்ட் சேதமானோருக்கு புதிய பாஸ்போர்ட் இலவசமாக மாற்றித் தரப்படும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். பாஸ்போர்ட் சேதமடைந்தவர்கள் சம்மந்தப்பட்ட அலுவலகங்களை அணுகலாம் எனவும் சுஷ்மா ஸ்வராஜ் கூறியிருக்கிறார்.
திருமுருகன் ஜாமீன் மனு: நாளை மறுநாள் தீர்ப்பு!

திருமுருகன் ஜாமீன் மனு: நாளை மறுநாள் தீர்ப்பு!

ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி தாக்கல் செய்த வழக்கில் நாளை மறுநாள் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் போராட்டத்தையொட்டிய துப்பாக்கி சூடு தொடர்பாக ஐக்கிய மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் திருமுருகன் காந்தி பேசினார். இதனைத்தொடர்ந்து இந்தியா திரும்பியவுடன் அவர் கைது செய்யப்பட்டார்.
ரூ.4,299க்கு ஐபோன் எக்ஸ்!

ரூ.4,299க்கு ஐபோன் எக்ஸ்!

ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலருக்கும் தற்போது ஆப்பிள் ஐபோன் எக்ஸ் அல்லது சாம்சங கேலக்ஸி எஸ்9+ மீது ஒரு அதீத ஆசை இருக்கும். இந்த ஆசையை நிறைவேற்ற ரெண்ட்மோஜோ என்ற நிறுவனம் புதிய திட்டத்தை அறிமுப்படுத்தியுள்ளது. இதன் கீழ் ஆப்பிள் ஐபோன் எக்ஸ், சாம்சங் கேலக்ஸி எஸ்9+ உள்ளிட்ட விலையுயர்ந்த போனை வாடகைக்கு அளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஐபோன் எக்ஸ் ரூ.4,299  கிடைக்குமாம்.
புனே வங்கி சர்வரில் புகுந்து ரூ.94 கோடியை சுருட்டிய ஹேக்கர்கள்!

புனே வங்கி சர்வரில் புகுந்து ரூ.94 கோடியை சுருட்டிய ஹேக்கர்கள்!

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள காஸ்மோஸ் வங்கியின் தலைமை அலுவலகத்தில் உள்ள இணைய சர்வருக்குள் சமீபத்தில் ஹேக்கர்கள் புகுந்து, அதிலிருந்து ரூ.94 கோடியை கொள்ளையடித்துள்ளனர். ஏதோ ஒரு வெளிநாட்டிலிருந்து கொண்டு, தங்கள் வங்கிக் கணக்கிற்கு இத்தொகையை நகர்த்தியுள்ளனர் அந்தக் ஹேக்கர்கள். இந்த இணையக் கொள்ளை தொடர்பாக, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more