Short News

பல் மருத்துவமனைகளில் புகையிலை தடுப்பு மையம்!

பல் மருத்துவமனைகளில் புகையிலை தடுப்பு மையம்!

நாடு முழுவதிலும் இருக்கும் பல் மருத்துவமனைகளில் புகையிலை தடுப்பு மையம் அமைக்கப்படும் என இந்திய பல் மருத்துவக் கவுன்சில் கூறியுள்ளது. பல்வேறு மாநிலங்களில் இருக்கும் 310 மருத்துவ கல்லூரிகளில் புகையிலை மீதான விழிப்புணர்வு ஏற்படுத்த ஆலோசனைகளை நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இந்திய பல் மருத்துவக் கவுன்சிலுக்கு வழிகாட்டுதல் அளித்துள்ளது.
யாரையும் அவமரியாதையாக பேச வேண்டிய அவசியம் இல்லை: கமல்!

யாரையும் அவமரியாதையாக பேச வேண்டிய அவசியம் இல்லை: கமல்!

யாரும் யாரையும் அவமரியாதையாக பேச வேண்டிய அவசியம் இல்லை என மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், கருணாஸின் பேச்சுச்சை இன்னும் கேட்கவில்லை என்றும் எனவே அதுகுறித்து கருத்து சொல்வது நியாயமாக இருக்காது என தெரிவித்தார்.
வருத்தம் தெரிவித்த கருணாஸ்!

வருத்தம் தெரிவித்த கருணாஸ்!

பத்திரிக்கை விவகாரத்தில் குறிப்பிட்ட சமூகத்தின் பெயரை கூறியதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்வதாக நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் நான் பேசிய 47நிமிட வீடியோ யூட்யூபில் உள்ளது. முழுவதையும் கேட்டால் நான் தவறாக பேசியதாக சொல்லமாட்டீர்கள் என்றார்.
மும்பை விமானத்தில் நடந்த உண்மை சம்பவம் இது தான்..!

மும்பை விமானத்தில் நடந்த உண்மை சம்பவம் இது தான்..!

மும்பை விமான நிலையத்தில் இருந்து ஜெய்பூர் நோக்கி புறப்பட்ட விமானத்தில் பயணித்தவர்களுக்கு கேபின் பிரஷர் குறைவு காரணமாக மூக்கு மற்றும் காது வழியாக ரத்தம் வந்தது. விமானி செய்த சிறிய தவறால் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் எப்படி நடந்தது? கேபின் பிரஷர் என்றால் என்ன? இதற்கு பின்னால் உள்ள தொழிற்நுட்பம் என்ன ?

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more