Short News

காங்கிரஸ் கட்சியில் சேரும் மாஜி ஆம் ஆத்மிகள்!

காங்கிரஸ் கட்சியில் சேரும் மாஜி ஆம் ஆத்மிகள்!

ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய முகங்களாக அறியப்பட்ட அசுதோஷ் மற்றும் ஆஷிஷ் கேதான் ஆகியோர் சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். இருப்பினும் அவர்களது ராஜினாமா கடித்தை கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்றுக்கொள்ளவில்லை என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இருவரும் காங்கிரஸ் கட்சியில் சேர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு!

தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு!

நாடார் பாதுகாப்பு பேரவை நிறுவனராக இருந்த வெங்கடேஷ் பண்ணையார் கடந்த 2003ம் ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி போலீஸார் சுட்டுக்கொலை செய்தனர். இந்நிலையில், தூத்துக்குடி அருகே உள்ள அம்மன்புரம் கிராமத்தில் நாளை வெங்கடேஷ் பண்ணையாரின், 15வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டுகிறது. இதில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க இன்று முதல் 27ம் தேதி வரை தூத்துக்குடி முழுவதும்  144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்னொரு நிரவ் மோடி: ரூ.5000 கோடி மோசடி செய்த குஜராத் தொழிலதிபர்!

இன்னொரு நிரவ் மோடி: ரூ.5000 கோடி மோசடி செய்த குஜராத் தொழிலதிபர்!

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் நிதின் சந்தேசரா, ஆந்திர வங்கியில் ரூ.5,000 கோடி வரை கடன் வாங்கி, திரும்பச் செலுத்த முடியாமல் தலைமறைவாகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்டெர்லிங் பயோ டெக் என்ற மருந்து நிறுவனத்தின் பெயரில் கடன் வாங்கி மோசடி செய்துள்ளார். தற்போது நைஜீரியாவில் பதுங்கி இருப்பதாகவுக்கும், அவருக்கு எதிராக கைது 'வாரன்ட் பிறப்பிக்கப்பட்டு சி.பி.ஐ. தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.
இன்று எந்த ராசிக்காரர்கள் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும்? புரிஞ்சு நடந்துக்கோங்க...

இன்று எந்த ராசிக்காரர்கள் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும்? புரிஞ்சு நடந்துக்கோங்க...

ஒரு நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்.

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more