Short News

கேரளாவில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு!

கேரளாவில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு!

வரலாறு காணாத மழை-வெள்ளத்தில் சிக்கித் தவித்த கேரளாவில், கடந்த ஒருசில நாட்களாகத்தான் மழை பெய்யாமல், வெள்ளமும் வடியத் தொடங்கியிருந்தது. இந்நிலையில், அங்கு வரும் 27 மற்றும் 28ஆம் தேதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனாலும் மக்கள் பீதியடைய வேண்டாம் என பேரிடர் மேலாண்மை வாரியம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் அறிமுகமான பிரம்மாண்ட சாம்சங் எல்.இ.டி டிவி!

இந்தியாவில் அறிமுகமான பிரம்மாண்ட சாம்சங் எல்.இ.டி டிவி!

சாம்சங் நிறுவனம் பொழுதுபோக்கு அம்சங்களில் புதிய அறிமுகத்தைக் கொண்டு வந்துள்ளது. "எல்.இ.டி ஃபார் ஹோம்" என்ற புதிய டிவிகளை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.1 கோடி முதல் ரூ.3.5 கோடி வரையில் உள்ளது. இதன் மாடல்களாக 110 இஞ்ச் FHD, 130 இஞ்ச் FHD, 220 இஞ்ச் UHD, 260 இஞ்ச் UHD ஸ்கிரீன் டிவிகள் விற்பனைக்கு வருகின்றன.  
இன்று அசத்துவார்களா பும்ரா, ஹர்திக் பாண்டியா?

இன்று அசத்துவார்களா பும்ரா, ஹர்திக் பாண்டியா?

ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 5வது லீக் போட்டி உச்சக்கட்ட பரபரப்பில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இதில் ஷர்துல் தாக்குர், கலீல் அகமட் ஆகியோருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர்.  
தெலங்கானாவில் மீண்டும் ஒரு ஆணவக்கொலை!

தெலங்கானாவில் மீண்டும் ஒரு ஆணவக்கொலை!

சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதால் தெலங்கானா மாநிலம் நல்கொண்டாவில் பட்டப்பகலில் மருத்துவமனை வளாகத்தில் 5 மாத கர்ப்பிணி கண்முன்னே தனது காதலனை வெட்டிச் சாய்த்தனர். இதேபோல் ஐதராபாத்தின் சானாத் நகரில் இன்று தம்பதி சந்தீப், மாதவியை வெட்டிக்கொல்ல முயற்சி செய்துள்ளனர். அந்த பெண்ணின் அப்பா இருவரையும் இன்று கொலை செய்ய முயற்சி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more