2027ல் 'மேட் இன் இந்தியா' ஸ்கூட்டர்களை களமிறக்கும் பியாஜியோ
ஆட்டோமொபைல்
- 2 hr, 32 min ago
ஹோண்டா ஆக்டிவா, டிவிஎஸ் ஜூபிடர் சந்தையை குறி வைத்து இத்தாலியைச் சேர்ந்த பியாஜியோ குழுமம் இந்திய சந்தைக்காக மிகப்பெரிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இதுவரை இந்தியாவில் வெஸ்பா மற்றும் ஏப்ரிலியா போன்ற பிரீமியம் ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனை செய்து வந்த நிறுவனம், இனி அதிக விற்பனை நடைபெறும் கம்யூட்டர் ஸ்கூட்டர் (Commuter Scooter) பிரிவிலும் களமிறங்க தயாராகியுள்ளது. அதிலும் முக்கியமாக, இந்த புதிய ஸ்கூட்டர்கள் அனைத்தும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட உள்ளன.