ரூ.2.07 லட்சத்தில் புதிய கேடிஎம் 200 டியூக் அறிமுகம்!
ஆட்டோமொபைல்
- 1 hr, 46 min ago
இளைஞர்கள் மத்தியில் முதல் விருப்ப தேர்வாக இருக்கும் கேடிஎம் 200 டியூக் (KTM 200 Duke) பைக்கில் முக்கியமான தொழில்நுட்ப அப்டேட்டுகள் செய்யப்பட்டு இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ரைடு-பை-வயர், இருவழி குயிக் ஷிஃப்டர், டிராக்ஷன் கன்ட்ரோல் மற்றும் ரைடிங் மோடுகள் எனப் பல புதிய வசதிகள் இந்த பைக்கில் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம், அதிக திறன் கொண்ட கேடிஎம் பைக்குகளில் காணப்படும் நவீன தொழில்நுட்பங்கள் தற்போது 200 டியூக் மாடலுக்கும் கிடைத்துள்ளது.