Short News

கேரள வெள்ள பாதிப்பிற்கு தமிழகமும் ஒரு காரணம்!

கேரள வெள்ள பாதிப்பிற்கு தமிழகமும் ஒரு காரணம்!

கேரள வெள்ள பாதிப்பிற்கு தமிழகமும் ஒரு காரணம் என உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், முல்லைப் பெரியார் அணையில் இருந்து திடீரென வெளியேற்றப்பட்ட நீரும் கேரளாவின் இடுக்கி பகுதியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கான காரணங்களில் ஒன்று எனவும் கூறியுள்ளார்.
கிர் காடுகளில் அடுத்தடுத்து 11 சிங்கங்கள் மரணம்!

கிர் காடுகளில் அடுத்தடுத்து 11 சிங்கங்கள் மரணம்!

குஜராத் மாநிலத்தின் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள கிர் வனத்தின் கிழக்குப் பகுதிகளில் கடந்த 10 நாட்களில் 11 சிங்கங்கள் திடீரென உயிரிழந்துள்ளன. அவற்றில் 3 இளம் சிங்கங்கள் ஒன்றோடொன்று சண்டை போட்டுக்கொண்டு இறந்துள்ளன. அடுத்தடுத்து 11 சிங்கங்கள் இறந்துள்ளதால் வன ஆர்வலர்கள் வருத்தமடைந்துள்ளனர். இதற்கிடையே இது குறித்து குஜராத் அரசு விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
விஜயலட்சுமியாக ஜோ!

விஜயலட்சுமியாக ஜோ!

வரும் அக்டோபர் 18ம் தேதி ரிலீஸாக இருக்கும் காற்றின்மொழி படத்தின் டீசன் தற்போது வெளியாகி இருக்கிறது. சாமானிய நடுத்தர பெண், ஆர்.ஜே.வாக தன்னை தயார்படுத்திக்கொள்ளும் கதையே இந்த காற்றின்மொழி. டீசரில் ஜோதிகாவின் இயல்பான நடிப்பு அனைவரையும் கவர்ந்துள்ளது. கேளம்பிட்டாளே விஜயலட்சுமி என்ற பிஜிம்மும் வரவேற்பை பெற்றுள்ளது.
பின்மூலத்தை உடனடியாக சரிசெய்யும் மாங்கொட்டை... எப்படி யூஸ் பண்ணனும்?

பின்மூலத்தை உடனடியாக சரிசெய்யும் மாங்கொட்டை... எப்படி யூஸ் பண்ணனும்?

பைல்ஸ் என்பது மூல நோய் என்று அறியப்படுகிறது. இதனை மருத்துவ மொழியில் ஹேமிராய்டு என்று கூறுகின்றனர். மலக்குடல் அல்லது ஆசனவாய் உள்ளே அல்லது வெளியே நரம்புகள் வீக்கம் அடைவதால் இந்த பிரச்சனை தோன்றுகிறது. மலம் கழிக்கும்போது கடினமாக உணர்வது, எரிச்சல், வலி போன்றவை இதன் அறிகுறிகள். இதற்கு மாதுளை தோல் நீர், முள்ளங்கி சாறு, அத்திப்பழம், ஆட்டுப்பால் ஆகியவை மிகச்சிறந்த தீர்வாக

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more