Short News

பதவி உயர்வில் இடஒதுக்கீடு கிடையாது: உச்சநீதிமன்றம் தடாலடி!

பதவி உயர்வில் இடஒதுக்கீடு கிடையாது: உச்சநீதிமன்றம் தடாலடி!

அரசாங்க பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடு என்பது இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. கடந்த 2006ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கோடிகளை கடந்த யார் இந்த தேவதை!

கோடிகளை கடந்த யார் இந்த தேவதை!

நடிகர் சிவகார்த்திகேயன் வழங்கும் கனா படத்தின் யார் இந்த தேவதை பாடல் யுடியூபில் வெளியாகி பிரபலமானது. இந்த பாடல் 3 கோடியை தாண்டி வியூஸ் வந்துள்ளது. இதன் மூலம் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் கனா படத்திற்கு நல்ல மார்க்கெட்டி கிடைத்துள்ளது. விரைவில் கனா படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது.
தமிழகத்தின் மீது அக்கறை கொண்ட கட்சி பாஜக!

தமிழகத்தின் மீது அக்கறை கொண்ட கட்சி பாஜக!

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், "தமிழக அரசுக்கு தொடர்ந்து மத்திய அரசு ஆதரவு கொடுத்து வருகிறது; அதை அரசியலாக பார்க்காதீர்கள், தமிழகத்தை போல் கேரளா, கர்நாடகா, மேற்குவங்க அரசுகளுக்கும் மத்திய அரசு ஆதரவு அளித்துள்ளது. தமிழகத்தின் மீது அதிக அக்கறை கொண்ட கட்சி பாஜக,தமிழக மக்கள் நிம்மதியாக வாழ பாஜக ஆட்சிக்கு வர வேண்டும்" என்றார்.
மத்திய அரசுக்கு ஆதரவு அளிப்பது அரசியலாகாது: பொன்னார்!

மத்திய அரசுக்கு ஆதரவு அளிப்பது அரசியலாகாது: பொன்னார்!

தமிழக அரசுக்கு தொடர்ந்து மத்திய அரசு ஆதரவு கொடுத்து வருகிறது என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மத்திய அரசு அளிக்கும் ஆதரவை அரசியலாக பார்க்காதீர்கள் எனவும் தமிழகத்தை போல் கேரளா, கர்நாடகா, மேற்குவங்க அரசுகளுக்கும் மத்திய அரசு ஆதரவு தெரிவித்து வருவதாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more