Short News

இடைத்தரகர்களுக்கு இங்கே இடமில்லை- மோடி!

இடைத்தரகர்களுக்கு இங்கே இடமில்லை- மோடி!

குஜராத்தில் பிரதமர் கிராமப்புற வீடுகட்டும் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற பெண்களுடன் மோடி வீடியோ கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், தூய்மைக்காக இந்திய அரசு அளிக்கும் முக்கியத்துவம் உலகளவில் பாராட்டப்படுகிறது,உலகளவிலான தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் சுகாதாரத்துறை இருக்க வேண்டும், எனது தலைமையிலான அரசில் இடைத்தரகர்களுக்கு இடமில்லை, அரசின் ஒவ்வொரு திட்டத்தின் பைசாவும் ஏழை மக்களைச் சென்றடையும்" என்றார்
ஆசியக் கோப்பை 2018: நாளை முதல் சூப்பர்-4 சுற்று!

ஆசியக் கோப்பை 2018: நாளை முதல் சூப்பர்-4 சுற்று!

14ஆவது ஆசியக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் சூப்பர்-4 ஆட்டங்கள் நாளை முதல் நடக்கின்றன. சூப்பர்-4ல் முதல் போட்டி நாளை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே துபாயில் நடக்க உள்ளது. அபு தாபியில் நாளை நடக்கும் மற்றொரு சூப்பர்-4 போட்டியில், பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
ஆஸ்திரேலியாவில் ஸ்ட்ராபெர்ரி பழத்தில் ஊசியை மறைத்து வைக்கும் தீவிரவாதிகள்

ஆஸ்திரேலியாவில் ஸ்ட்ராபெர்ரி பழத்தில் ஊசியை மறைத்து வைக்கும் தீவிரவாதிகள்

ஆஸ்திரேலியாவில் ஸ்ட்ராபெர்ரி பழத்தில் தீவிரவாதிகள் மெல்லிய ஊசியை நுழைத்து மறைத்து வைத்துவிடுவதாக தகவல் பரவியது. இதனால் பழத்தை உண்டவர்கள் தொண்டையிலும், வயிற்றிலும் ஊசி சிக்கி பெரும் அவதிக்குள்ளாதி வந்தனர். இதனை தீவிரவாதச் செயல் என்றும் இதனைச் செய்பவர்களுக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும் என்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன் எச்சரித்துள்ளார்.
அர்ஜுனனுக்கு துரியோதனன் வழங்கிய அற்புதமான பரிசு என்ன தெரியுமா?

அர்ஜுனனுக்கு துரியோதனன் வழங்கிய அற்புதமான பரிசு என்ன தெரியுமா?

முன்னர் ஒருமுறை தன்னை காப்பாற்றியதற்காக அர்ஜுனனுக்கு அவன் விரும்பும் பரிசை வழங்குவதாக துரியோதனன் வாக்களித்தான். போரில் பாண்டவர்களை வதைக்க தன் சக்தி கொண்டு 5 அற்புத தங்க அம்புகளை உருவாக்கினார் பீஷ்மர். இதனை அறிந்த கிருஷ்ணர் அந்த அம்புகளை பரிசாக துரியோதனனிடம் இருந்து பெற்று வருமாறு அர்ஜுனனை அனுப்பினார். துரியோதனனும் தான் அளித்த வாக்கிற்காக அந்த அம்புகளை அர்ஜுனனிடம் கொடுத்துவிட்டான்.

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more