Short News

பெங்களூருவில் திருமுருகன் காந்தி கைது!

பெங்களூருவில் திருமுருகன் காந்தி கைது!

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான திருமுருகன் காந்தி இன்று அதிகாலை பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். நார்வேயிலிருந்து வந்து இறங்கியவுடன், அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அவரைக் கைது செய்தனர். சென்னை மைலாப்பூர் காவல் நிலையத்தில் திருமுருகன் காந்திக்கு எதிராக தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழகப் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கேரளாவுக்கு ரூ.600 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு!

கேரளாவுக்கு ரூ.600 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு நிதியுதவியாக அறிவித்த ரூ.600 கோடி நிதியை மத்திய அரசு விடுவித்தது. இதில்பிரதமர் மோடி அறிவித்த ரூ.500 கோடி மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்த ரூ.100 கோடியை விடுவித்துள்ளதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய உணவு, பொதுவிநியோகத்துறை கேரளாவுக்கு 89,540 மெட்ரிக் டன் அரிசியை கூடுதலாக ஒதுக்கீடு செய்துள்ளது.
கேரளாவுக்கு ரூ.600 கோடி விடுவித்தது மத்திய அரசு!

கேரளாவுக்கு ரூ.600 கோடி விடுவித்தது மத்திய அரசு!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ.600 கோடி நிதியை விடுவித்துள்ளது மத்திய அரசு. பிரதமர் மோடி அறிவித்த ரூ.500 கோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்த ரூ.100 கோடியை விடுவித்தது மத்திய அரசு. முன்னதாக கேரளாவில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.
மீண்டும் கிம்மை சந்திப்பேன்: டிரம்ப் தடாலடி!

மீண்டும் கிம்மை சந்திப்பேன்: டிரம்ப் தடாலடி!

வடகொரிய அதிபர் கிம்மை மீண்டும் சந்திப்பேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியுள்ளார். ஏற்கெனவே சிங்கப்பூரில் இருவரும் சந்தித்துக்கொண்டு இருநாடுகளுக்கு மத்தியில் நல்லறவு ஏற்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். சிறப்பு பேட்டியில் பேசியுள்ள டிரம்ப், வடகொரியா அணு ஆயுதங்களை வீட்டு விலகி வருவதாக கூறியுள்ளார்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more