Short News

ஆந்திர முதல்வரை அழைத்த திருப்பதி தேவஸ்தானம்!

ஆந்திர முதல்வரை அழைத்த திருப்பதி தேவஸ்தானம்!

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்திற்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் நேரில் சென்று அழைப்பு விடுத்தார். வரும் 13ம் தேதி ஆந்திர அரசு சார்பில் திருப்பதி கோவிலுக்கு பட்டு வஸ்திரம் காணிக்கையாக வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் ஆந்திர அரசின் முக்கிய அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர்.
கிசான் விகாஸ் பத்ரா - என்பிஎஸ்: உங்கள் முதலீட்டு போர்ட்போலியோவிற்கு சிறந்தது எது?

கிசான் விகாஸ் பத்ரா - என்பிஎஸ்: உங்கள் முதலீட்டு போர்ட்போலியோவிற்கு சிறந்தது எது?

கிசான் விகாஸ் பத்ரா மற்றும் தேசிய சேமிப்புப் பத்திரம் உள்ளிட்ட சிறு சேமிப்புத் திட்டங்கள் மீதான அக்டோபர் - டிசம்பர் காலாண்டு வட்டி விகிதத்தினை மத்திய அரசு உயர்த்தி அறிவித்துள்ளது. தபால் நிலையங்களில் இருந்து இயங்கி வரும் இந்த நிரந்தர வருவாய் அளிக்கக் கூடிய சேமிப்புத் திட்டங்களில் உங்களுக்கு ஏற்றது எது என்று இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

திருப்பதி அருகே செம்மரம் வெட்ட சென்றதாக 7 தமிழர்கள் கைது!

திருப்பதி அருகே செம்மரம் வெட்ட சென்றதாக 7 தமிழர்கள் கைது!

ஆந்திரா மாநிலம் திருப்பதி அருகே செம்மரம் வெட்ட சென்றதாக 7 தமிழர்களை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இவர்கள் நேற்றிரவு சந்தேகத்துக்குரிய வகையில் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது 7 பேரை கைது செய்துள்ளனர். விசாரணையில் திருவண்ணாமலை, வேலூரை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 6,099 கன அடியிலிருந்து 5,462 கனஅடியாக குறைந்தது .அணையின் தற்போதைய நீர்மட்டம் 105.62 அடி; நீர் இருப்பு 72.31 டி.எம்.சி. ஆகும். டெல்டா பாசன வசதிக்காக அணையிலிருந்து நொடிக்கு 22,800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. கிழக்கு மற்றும் மேற்குக் கால்வாய் பாசனத்திற்காக அணையிலிருந்து வழக்கம்போல் நொடிக்கு 800 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more