Short News

உங்கள் வீடு சுங்கச்சாவடிக்கு அருகில் உள்ளதா?  புதிய Fastag

உங்கள் வீடு சுங்கச்சாவடிக்கு அருகில் உள்ளதா? புதிய Fastag

இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளின் அருகில் வசிப்பவர்களுக்கு பயன்படும் வகையில், மத்திய அரசு புதிய சலுகையை அறிவித்துள்ளது. சுங்கச்சாவடியில் இருந்து 20 கி.மீ. சுற்றளவுக்குள் வசிக்கும் தகுதியான தனியார் வாகன உரிமையாளர்கள், குறைந்த கட்டணத்தில் வருடாந்திர FASTag லோக்கல் பாஸ் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்தப் புதிய நடைமுறை வரும் நவம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது.
ஜாவா, யெஸ்டி, பிஎஸ்ஏ பைக் உரிமையாளர்களுக்கு குட் நியூஸ்!

ஜாவா, யெஸ்டி, பிஎஸ்ஏ பைக் உரிமையாளர்களுக்கு குட் நியூஸ்!

ஜாவா (Jawa), யெஸ்டி (Yezdi), பிஎஸ்ஏ (BSA) மோட்டார்சைக்கிள் உரிமையாளர்களுக்கு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது கிளாசிக் லெஜண்ட்ஸ் (Classic Legends) நிறுவனம். இந்த மூன்று பிராண்டுகளின் அசல் உதிரிபாகங்களை வழக்கமான டீலர்ஷிப் மையங்களைத் தாண்டியும் வாங்குவதற்கான அங்கீகரிக்கப்பட்ட வினியோகக் கட்டமைப்பை நிறுவனம் விரிவுபடுத்தியுள்ளது. இதன் மூலம் பைக் உரிமையாளர்கள் மட்டுமின்றி, தனியார் மெக்கானிக்குகள் மற்றும் சர்வீஸ் மையங்களும் பயனடைய உள்ளன.
டிவிஎஸ் ஐக்யூப் EV ஸ்கூட்டர்: எந்த வேரியண்ட் சிறந்தது?

டிவிஎஸ் ஐக்யூப் EV ஸ்கூட்டர்: எந்த வேரியண்ட் சிறந்தது?

இந்தியாவில் தினசரி பயணங்களுக்கு ஏற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் டிவிஎஸ் ஐக்யூப் வாடிக்கையாளர் மத்தியில் முதன்மையான தேர்வாக இருக்கிறது. குடும்பத்தினருக்கு ஏற்ற நடைமுறை பயன்பாட்டு அம்சங்கள், அலுவலகப் பயணம், சர்வீஸ் நெட்வொர்க், குறைந்த செலவில் வாகனத்தைப் பராமரிப்பது என தேவைகளுக்கு ஏற்ற வகையில் இந்த ஸ்கூட்டர் கிடைப்பதுடன், வாடிக்கையாளர்களின் பட்ஜெட்டிற்கும், தேவைக்கும் தக்கவாறு வெவ்வேறு பேட்டரி திறன்களில் கிடைக்கிறது.
வரும் ஜனவரியில் அறிமுகமாகிறது டாடா சஃபாரி 7 சீட்டர் EV?

வரும் ஜனவரியில் அறிமுகமாகிறது டாடா சஃபாரி 7 சீட்டர் EV?

இந்தியாவில் பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற எலெக்ட்ரிக் கார்களின் தேர்வு மெல்ல அதிகரித்து வருகிறது. இந்த வரிசையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதன்மையான எஸ்யூவிகளில் ஒன்றான சஃபாரியின் எலெக்ட்ரிக் வெர்ஷன் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. டாடா ஹாரியர் இவி ஏற்கெனவே விற்பனையில் இருக்கும் நிலையில், அதைவிட அதிக இடவசதியுடன் மூன்று வரிசை இருக்கைகளைக் கொண்ட சஃபாரி இவி வரும் ஜனவரியில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.