Short News

ரூ.95,000ல் ஸ்பெஷலான டிவிஎஸ் ரெய்டர் 125 பைக் அறிமுகம்

ரூ.95,000ல் ஸ்பெஷலான டிவிஎஸ் ரெய்டர் 125 பைக் அறிமுகம்

பல்வேறு தனித்துவமான சிறப்பம்சங்களுடன் கூடிய டிவிஎஸ் ரெய்டர் 125 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரெய்டர் 125 டாக்டர் டூம் என்ற பெயரில் வந்துள்ள இந்த பைக்கிற்கு ரூ.95,320 எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்பெஷல் எடிசன் மாடலில் இடம்பெற்றிருக்கும் முக்கிய அம்சங்களை தொடர்ந்து பார்க்கலாம்.
புதிய ஃபோர்ஸ் அர்பானியா டீலக்ஸ் வேனின் அசத்தும 10 விஷயங்கள்!

புதிய ஃபோர்ஸ் அர்பானியா டீலக்ஸ் வேனின் அசத்தும 10 விஷயங்கள்!

சுற்றுலா மற்றும் நீண்ட தூர பயணங்களுக்கு ஃபோர்ஸ் அர்பானியா வேன் மிகச் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. ஒரு டிரிப் செல்கிறோம் என்றால் வாகனத்தில் ஏறி பயணித்து இறங்குவது வரை மிகச் சிறப்பான அனுபவத்தை வழங்க வேண்டும். அந்த வகையில், சிறப்பான இடவசதி, சொகுசு அம்சங்களுடன் காரில் செல்வதை விட மிகச் சிறந்த பயண அனுபவத்தை இந்த வேன் தரும் என்றால் மிகையாகாது. இந்த நிலையில், பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை வழங்கும் வகையில் ஃபோர்ஸ் அர்பானியாவின் புதிய டீலக்ஸ் மாடல் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஏற்கனவே இருந்த மாடலுக்கு மாற்றாக வந்துள்ள இந்த புதிய மாடல் குறித்து வாடிக்கையாளர்கள் மத்தியிலும், சுற்றுலா திட்டமிடுவோர் மத்தியிலும் அதிக ஆவல் ஏற்பட்டுள்ளது. இந்த புதிய அர்பானியா மாடலின் சிறப்பான 10 விஷயங்களை தொடர்ந்து பார்க்கலாம்.
கூடுதல் சிறப்பம்சங்களுடன் யெஸ்டி பைக்குகள் அறிமுகம்!

கூடுதல் சிறப்பம்சங்களுடன் யெஸ்டி பைக்குகள் அறிமுகம்!

கூடுதல் சிறப்பம்சங்களுடன் தனது பைக் மாடல்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது யெஸ்டி மோட்டார்சைக்கிள் நிறுவனம். வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், தனது அட்வென்ச்சர், ரோட்ஸ்டெர் மற்றும் ஸ்க்ராம்ப்ளர் ரக பைக் மாடல்களில் சில மாற்றங்களை செய்து 2026 மாடல்களாக கொண்டு வந்துள்ளது.
E20 பெட்ரோல் போட்டால் மைலேஜ் 6% வரை குறையுமா? அரசு விளக்கம்

E20 பெட்ரோல் போட்டால் மைலேஜ் 6% வரை குறையுமா? அரசு விளக்கம்

E20 பயன்படுத்தினால் பழைய வாகன எஞ்சின்களில் பிரச்னை ஏற்படும்; மைலேஜ் குறையும் என்ற விவாவதம் தீவிரமடைந்து இருக்கும் நிலையில், இதுதொடர்பாக இரண்டு முக்கிய தகவல்களை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இது பழைய வாகனங்களை வைத்திருப்பவர்களை மேலும் கவலையில் ஆழ்த்தி உள்ளது.