Short News

அமெரிக்காவில் சூறாவளி!

அமெரிக்காவில் சூறாவளி!

பசிபிக்கடலில் ஏற்பட்ட புயல் காரணமாக அமெரிக்காவின் ஹவாய் உள்ளிட்ட பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பல பகுதிகளில் நிலச்சரிவு உள்ளிட்ட சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. தாழ்வான பகுதியில் இருந்த மக்கள் பாதுகாப்பான பகுதியில் அனுப்பப்பட்டு வருகின்றனர்.
கருணாசுக்கு ஒரு சட்டம், ஹெச்.ராஜாவிற்கு ஒரு சட்டமா?

கருணாசுக்கு ஒரு சட்டம், ஹெச்.ராஜாவிற்கு ஒரு சட்டமா?

முதல்வர் மற்றும் காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சென்னை சாலிகிராமத்தில் எம்எல்ஏ கருணாஸ் கைது செய்யப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்த மு.க.ஸ்டாலின்" ஆளுக்கு ஒரு நீதி வேளைக்கு ஒரு நியாயம், அதிமுக அரசின் பாகுபாடான போக்கு அநீதியானது, அதிமுக ஆட்சியில் கருணாசுக்கு ஒரு சட்டம், எஸ்.வி.சேகர் மற்றும் ஹெச்.ராஜாவிற்கு ஒரு சட்டமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ரசாயனம் பரப்பும் விநாயகர்: செத்து மிதக்கும் கடல்வாழ் உயிரினங்கள்!

ரசாயனம் பரப்பும் விநாயகர்: செத்து மிதக்கும் கடல்வாழ் உயிரினங்கள்!

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் மும்பை நகரின் ஜுஹு கடற்கரையில் ரசாயன வண்ணங்கள் கலக்கப்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பட்டத்தை தொடர்ந்து ஏராளமான கடல்வாழ் உயிரினங்கள் செத்து மிதக்கின்றன. மீன்கள், ஆமைகள், நண்டுகள், நீர்ப்பாம்புகள் என கடலின் மேற்பரப்பில் மிதக்கும் காட்சியை காண முடிகிறது.
பெங்களூருவில் வாகன கண்காட்சி!

பெங்களூருவில் வாகன கண்காட்சி!

கர்நாடக மாநிலம் பெங்களூரிவில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் வாகன உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களின் வாகனங்கள் வைக்கப்பட்டுள்ளன. சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வாகனங்களை உபயோகிக்க மக்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more