Short News

வரலாற்றில் இன்று!

வரலாற்றில் இன்று!

1833-சிகாகோ நகரம் அமைக்கப்பட்டது.1964 - இனவெறிக் கொள்கை காரணமாக தென்னாபிரிக்கா ஒலிம்பிக்கில் விளையாடத் தடை செய்யப்பட்டது.1914 - முதலாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியம் ஆத்திரியா-அங்கேரி மீது போர் தொடுத்த தினம்.1950 - கொரியப் போர்.,1960- எக்கோ 1 என்ற முதலாவது தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் ஏவப்பட்டது.,சர்வதேச இளைஞர்கள் தினம்.,
ஹர்திக் ஆல் ரவுண்டர் இல்லை: ஹர்பஜன் தடாலடி!

ஹர்திக் ஆல் ரவுண்டர் இல்லை: ஹர்பஜன் தடாலடி!

ஹர்திக் பாண்டியாவை ஆல் ரவுண்டர் என குறிப்பிடக்கூடாது என இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளார். கடந்த நான்கு இன்னிங்சில் 90 ரன்கள் குவித்து, 3 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்ததன் மூலம் ஹர்திக் பாண்டியாவின் திறமை கேள்விக்குறியாகியுள்ளதாகவும் ஹர்மஜன் கூறியுள்ளார்.
கேரளாவின் நிலை மிகுந்த வலி- ராகுல் ட்வீட்

கேரளாவின் நிலை மிகுந்த வலி- ராகுல் ட்வீட்

கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை பெய்ததால், அனைத்து கிராமங்களும் வெள்ளத்தால் சிக்கி தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், "கேரள வரலாற்றிலேயே இந்த பேரழிவு ஈடுகட்ட முடியாத ஒன்று என்பதால் அம்மாநிலத்துக்கு சிறப்பு நிதியுதவி அளிக்கவும், மீட்புப் பணிகளுக்கு ராணுவ வீரர்களை அதிகளவில் அனுப்பவும் பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்" என்று காங். தலைவர் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்
வாஜ்பாய் மரணம்: ட்விட் செய்த திரிபுரா ஆளுநர்!

வாஜ்பாய் மரணம்: ட்விட் செய்த திரிபுரா ஆளுநர்!

வாஜ்பாய் இறந்துவிட்டதாக திரிபுரா ஆளுநர் தத்தகட்டா ராய் ட்விட் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத சூழ்நிலையில் மாநிலத்தின் ஆளுநரே வாஜ்பாய் உடல்நிலை குறித்து ட்விட் செய்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்நிலையில் தவறுதலாக ட்விட் செய்துவிட்டதாக ஆளுநர் தத்தகட்டா பதிவிட்டுள்ளார்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more