Short News

வரலாற்றில் இன்று!

வரலாற்றில் இன்று!

‘சர்வதேச உடல் உறுப்பு தான தினம்.1913 - ஹரி பிரியர்லி, துருப்பிடிக்காத எஃகுவை கண்டுபிடித்தார்.1954 - பாகிஸ்தான் தனது தேசிய கீதத்தை முதன் முறையாக வானொலியில் ஒலிபரப்பியது.1960 - மத்திய ஆப்ரிக்க குடியரசு விடுதலை தினம்.சர்வதேச இடது கையாளர்கள் தினம்.1964 - ஐக்கிய இராச்சியத்தில் கடைசித் தடவையாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.  
இந்த இலையும் காயும் பார்த்திருக்கீங்களா? மழைக்காலத்து நோய்க்கு இதுதான் மருந்து

இந்த இலையும் காயும் பார்த்திருக்கீங்களா? மழைக்காலத்து நோய்க்கு இதுதான் மருந்து

முட்களுடன் கூடிய சிறிய இலைகளைக் கொண்ட, புதர்போல வளரும் ஆதண்டைச் செடியும் அப்படித்தான். கருஞ்சுரை, காத்தோடி கொடி, காட்டுக்கத்திரி எனும் பெயர்களிலும் அழைக்கப்படும் ஆதண்டைச்செடியின் இலைகள், பூக்கள் மற்றும் வேர்கள் மருத்துவ குணமிக்கவை. சுவாச கோளாறுகள், இரத்த சர்க்கரை பாதிப்பு, கண்பார்வை குறைபாடு போன்ற பாதிப்புகளுக்கு, ஆதண்டை சிறந்த நிவாரணம் அளிக்கிறது.

கேரள வெள்ளம்: பெர்சன் ஃபைண்டர் டூலை ஆக்டிவேட் செய்த கூகுள்!

கேரள வெள்ளம்: பெர்சன் ஃபைண்டர் டூலை ஆக்டிவேட் செய்த கூகுள்!

கேரளாவின் மழை வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களுக்கு உதவும் நோக்கில் கூகுள் பெர்சன் ஃபைன்டர் டூல் (Google Person Finder) ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளது. இந்த டூலைப் பயன்படுத்தி இயற்கைப் பேரிடரில் சிக்கித் தவிப்போரைக் கண்டுபிடிக்க முடியும்; மீட்கப்பட்டவர்களைப் பற்றிய தகவல்களையும் கொடுக்க/பகிர முடியும். Kerala flooding என்ற தலைப்பில் செயல்படுகிறது அந்த டூல்.
பாதரியாரை விடுவிக்க துருக்கியை மிரட்டும் டிரம்ப்!

பாதரியாரை விடுவிக்க துருக்கியை மிரட்டும் டிரம்ப்!

அதிபர் எர்டோகன் தலைமையிலான துருக்கி அரசை கவிழ்க்க சதி செய்ததாக எழுந்த புகாரில் அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்துவ பாதரியார் புரூன்சன் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் பாதரியாரை விடுவிக்கவில்லை என்றால் துருக்கி மீது பொருளாதாரத்தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்விட் செய்துள்ளார்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more