Short News

வரலாற்றில் இன்று!

வரலாற்றில் இன்று!

1791 - நீராவிக் கப்பலுக்கான அமெரிக்கக் காப்புரிமத்தை ஜோன் பிட்ச் பெற்றுக் கொண்டார். 1910- புனிதர் அன்னை தெரசா பிறந்த தினம்.,1883-தமிழறிஞர் திரு.வி.கல்யாண சுந்தரனார் பிறந்த தினம்., 1920-அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்ட தினம்,,1980 - அமெரிக்க நடிகர் கிறிஸ் பைன் பிறந்த நாள்,, அமெரிக்காவில் பெண்கள் சமஉரிமை தினம்.,
ரஜினியை இயக்கும் ஏ.ஆர். முருகதாஸ்!

ரஜினியை இயக்கும் ஏ.ஆர். முருகதாஸ்!

நடிகர் ரஜினி அரசியலில் ஈடுபடவுள்ளதாக அறிவித்த பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட என்ற படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இதனையடுத்து அவர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தையும் சன்பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் ஹெச்4 விசா விரைவில் ரத்து: இந்தியர்களுக்கு ஆபத்து!

அமெரிக்காவில் ஹெச்4 விசா விரைவில் ரத்து: இந்தியர்களுக்கு ஆபத்து!

அமெரிக்காவில் ஹெச்4 விசாவின் கீழ் 1.26 லட்சம் பேருக்கு அமெரிக்க குடியுரிமை அனுமதி வழங்கியுள்ளது. அவர்களில் 93 சதவிகிதம் பேர் இந்தியர்கள் ஆவர். இந்த நிலையில், ஹெச்4 விசாவை ரத்து செய்யும் புதிய சட்டம் ஒன்று இன்னும் 3 மாதங்களில் நிறைவேறும் என்று தெரிகிறது. இதையடுத்து, இவ்விசாவின் கீழ் பணிபுரியும் இந்தியர்களுக்கு வேலை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சிவகார்த்தியின் புதிய படம் 'ஜித்து ஜில்லாடி'?

சிவகார்த்தியின் புதிய படம் 'ஜித்து ஜில்லாடி'?

சிவகார்த்திகேயன்-நயன்தாரா மீண்டும் ஜோடியாக நடிக்கவுள்ள படத்தை இயக்குகிறார் ராஜேஷ். வழக்கம்போல் முழுநீளக் காமெடிப் படமாகவே ராஜேஷ் எடுக்கவுள்ள இப்படத்தின் தலைப்பு 'ஜித்து ஜில்லாடி' என்று தகவல் கிளம்பியுள்ளது. ஆனால், படத்தலைப்பு இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று கூறியுள்ள ராஜேஷ், இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று ட்வீட்டியுள்ளார்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more