Short News

ஹவாயைத் தாக்கிய லேன் புயல்!

ஹவாயைத் தாக்கிய லேன் புயல்!

ஹவாய் தீவை லேன் என்ற சூறாவளி கடுமையாகத் தாக்கியுள்ளது. அங்கு மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்றுடன் மழை கொட்டிக் கொண்டிருக்கிறது. கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா ஸ்தலமான ஹவாய்த் தீவில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு அவசர நிலையைப் பிரகடனம் செய்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
சாய்னாவாக ஸ்ரத்தா கபூர்!

சாய்னாவாக ஸ்ரத்தா கபூர்!

பிரபல இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் வாழ்க்கை வரலாறு படத்தில் ஸ்ரத்தா கபூர் நடித்திருக்கிறார். இதற்கான பல மாதங்கள் ஸ்ரத்தா கபூர் பேட்மிண்டன் விளையாட்டை முறைக்கப்படி கற்றுக்கொண்டுள்ளார். அமொலே குப்தே இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடந்து வருகிறது.
முதல் பட சம்பளத்தை கேரளாவுக்குக் கொடுத்த துருவ்!

முதல் பட சம்பளத்தை கேரளாவுக்குக் கொடுத்த துருவ்!

பாலா இயக்கத்தில் 'வர்மா' படத்தின் மூலம் அறிமுகமாகி நடித்துள்ளார் விக்ரமின் மகனான துருவ். இந்தப் படத்திற்காகக் கிடைத்த முழுச் சம்பளத்தையும் அவர் கேரள வெள்ள நிவாரண நிதிக்காக அளித்துள்ளார். திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து இந்த நிதியை அளித்துள்ளார் துருவ். அவருடைய இச்செயலைப் பலதரப்பினரும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
6 சிறைத் துறை அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்!

6 சிறைத் துறை அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்!

தமிழகத்தில் 6 சிறைத் துறை அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புழல் சிறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி, கோவை சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார், சேலம் சிறை கண்காணிப்பாளர் ஆண்டாள், கடலுார் சிறை கூடுதல் கண்காணிப்பாளர் கிருஷண்ராஜ், வேலுார் சிறை கூடுதல் கண்காணிப்பாளர் முருகேசன், திருச்சி சிறை கண்காணிப்பாளர் நிஜிலா நகேந்திரன் ஆகியோரை இடம் மாற்றி உத்தரவிட்டுள்ளது சிறைத் துறை.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more