Short News

ஆக.18ல் பாகி. பிரதமராக பதவியேற்கிறார் இம்ரான் கான்!

ஆக.18ல் பாகி. பிரதமராக பதவியேற்கிறார் இம்ரான் கான்!

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கராச்சியில் போட்டியிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் நிறைய இடங்களில் வெற்றி பெற்றார் இதனை தொடர்ந்து கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்கவும் போகிறார். ஆகஸ்ட் 18ஆம் தேதி பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்கிறார் . பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் ஜூலை 26ஆம் தேதி நடைபெற்றது.
ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயனங்கள் எப்படி சுத்திகரிக்கப்பட்டது?

ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயனங்கள் எப்படி சுத்திகரிக்கப்பட்டது?

ஸ்டெர்லைட் ஆலையில் ஆர்சனிக், மெர்க்குரி, காட்மியம் எந்த முறை பயன்படுத்தி சுத்திகரிக்கப்பட்டது? என்ற கேள்விக்கு தூத்துக்குடி சுங்கத்துறை ஆணையர் செப்டம்பர் 3ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், தாமிரத்தை சுத்திகரிப்பு செய்த பின் மூலப்பொருளில் இருந்த ரசாயனங்கள் எப்படி சுத்திகரிக்கப்பட்டது? என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டுமென உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நடிகர்கள் அரசியல் வெற்றிடத்தை நிரப்ப முடியாது!

நடிகர்கள் அரசியல் வெற்றிடத்தை நிரப்ப முடியாது!

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், "ஒரு சூரியன் மறைந்ததும் வானத்தில் பல நட்சத்திரங்கள் தோன்ற முயற்சிக்கும், கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரு பெரிய தலைவர்கள் இல்லாத தமிழக அரசியல் களத்தை 50 ஆண்டுகளுக்குப் பிறகு பார்க்கிறோம், தமிழகத்தின் அரசியல் வெற்றிடத்தை சினிமாவில் இருந்து வந்தவரால் நிரப்ப முடியாது" என்றார்.
முதல் வெற்றியை பதிவு செய்த செரீனா!

முதல் வெற்றியை பதிவு செய்த செரீனா!

அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வரும் சின்சினாட்டி மாஸ்டர்ஸ் தொடரில் முன்னணி டென்னிஸ் வீரர்கள் பங்கேற்று ஆடி வருகிறார்கள். தற்போது முதல் சுற்றுப் போட்டிகள் நடந்து வருகிறது. அதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் வெற்றி பெற்றார். ஆண்கள் பிரிவில் முன்னணி ஆண்டி முர்ரே தோல்வி அடைந்துள்ளார்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more