Short News

இந்தோனேஷியாவின் நிலநடுக்கம்: 400 நெருங்கும் பலி எண்ணிக்கை!

இந்தோனேஷியாவின் நிலநடுக்கம்: 400 நெருங்கும் பலி எண்ணிக்கை!

இந்தோனேஷியாவின் லாம்போக் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 384 அதிகரித்துள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து வருகின்றன். காணாமல்போனவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. பலத்த காயம் காரணமாக 100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அரசியல் சேர 100 கோடி பேரம்: பார்த்திபன் பகீர்!

அரசியல் சேர 100 கோடி பேரம்: பார்த்திபன் பகீர்!

தனது அரசியல் கட்சியில் சேர ஒரு தலைவர் தனக்கு நூறு கோடி தருவதாக கூறி அழைத்தார் என நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் நடைபெற்ற புத்தக வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய பார்த்திபன், தனக்கு அரசியல் தெரியாது, அதில் இணையவும் தான் விரும்பவில்லை என அந்த அரசியல் தலைவரிடம் சொல்லிவிட்டதாக கூறினார்.
டிரைலர் வெளியிட்டு விழா: ரசிகர்களை அழைத்த சமந்தா!

டிரைலர் வெளியிட்டு விழா: ரசிகர்களை அழைத்த சமந்தா!

சமந்தா முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் யுடர்ன் படத்தின் டிரைலர் ஹைதராபாத்தில் இருக்கும் மல்டி பிளக்ஸில் வெளியிடப்படுகிறது. இந்த விழாவில் நேரடியாக பங்கேற்க தனது ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் சமந்தா. மேலும் ரசிகர்களுடன் இணைந்து எடுக்கும் செல்பியை பட ப்ரோமோசன்களிலும் பயன்படுத்த இருக்கிறாராம் சமந்தா.
தங்கம் விலை உயர்வு!

தங்கம் விலை உயர்வு!

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றை விட இன்று ஒரு கிராமுக்கு ரூ.7 உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கம் தற்போது ஒரு கிராமுக்கு ரூ.2,835 ஆக விற்பனையாகிறது. ஒரு சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.22,744 ஆகும். 24 கேரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.29,770க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.41.10 ஆகும். ஒரு கிலோ வெள்ளிக் கட்டி ரூ.41,100 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more