Short News

BS6 வாகனங்களுக்கான PUC செல்லுபடி காலம் 3 ஆண்டுகளாக உயருமா?

BS6 வாகனங்களுக்கான PUC செல்லுபடி காலம் 3 ஆண்டுகளாக உயருமா?

கார் மற்றும் பைக் வைத்திருப்பவர்கள் அனைவரும் குறிப்பிட்ட கால இடைவெளியில் Pollution Under Control Certificate (PUC) எனப்படும் வாகனங்கள் வெளியிடும் புகையில் உள்ள மாசு உமிழ்வு அளவை காட்டும் சான்றிதழை குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து புதுப்பிக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில், பிஎஸ்6 தரநிலையுடன் தயாரிக்கப்பட்ட தனியார் வாகனங்களுக்கான PUC சான்றிதழின் செல்லுபடி காலத்தை தற்போதைய ஒரு ஆண்டிலிருந்து 3 ஆண்டுகளாக உயர்த்தும் வரைவு அறிவிப்பை (Draft Notification) மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
ஆகஸ்ட் 18-ல் அறிமுகமாகும் ஸ்கோடா ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்ட்

ஆகஸ்ட் 18-ல் அறிமுகமாகும் ஸ்கோடா ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்ட்

எஸ்யூவி மாடல்களின் வருகையால் செடான் கார்களின் விற்பனை இந்தியாவில் சற்று மந்தமான நிலையில் இருந்தாலும், இந்த பிரிவில் ஸ்கோடா ஸ்லாவியா கார் மிகச் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், வடிவமைப்பில் சில மாறுதல்கள் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் கூடிய புதிய ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்ட் மாடலை வரும் ஆகஸ்ட் 18ந் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளதாக ஸ்கோடா நிறுவனம் உறுதி செய்துள்ளது.
இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் சிறிய கார் விற்பனை!!

இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் சிறிய கார் விற்பனை!!

கடந்த சில ஆண்டுகளாக இந்திய கார் சந்தையில் எஸ்யூவி மாடல்கள் விற்பனையில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், கடந்த மாதம் சிறிய கார்களின் விற்பனை திடீரென அதிகரித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, முதல் முறையாக கார் வாங்கும் வாடிக்கையாளர்களே இந்த மாற்றத்துக்கு முக்கிய காரணமாக உள்ளனர்.
புதிய டொயோட்டா ஹைலக்ஸ் அறிமுகம்.. விலை ரூ.31.99 லட்சம்

புதிய டொயோட்டா ஹைலக்ஸ் அறிமுகம்.. விலை ரூ.31.99 லட்சம்

புதிய பொலிவுடன் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய டொயோட்டா ஹைலக்ஸ் சொகுசு ரக பிக்கப் டிரக் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புதிய மாடலுக்கு ரூ. 31.99 லட்சம் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆஃப்-ரோடு சாகசங்களை விரும்புபவர்களுக்கு பிரீமியமான இந்த பிக்கப் டிரக் சிறந்த தேர்வாக வந்துள்ளது.