Short News

தென் கொரிய முன்னாள் பெண் அதிபருக்கு 25 ஆண்டுகள் ஜெயில்!

தென் கொரிய முன்னாள் பெண் அதிபருக்கு 25 ஆண்டுகள் ஜெயில்!

ஊழல் வழக்கில் கைதான தென் கொரிய முன்னாள் அதிபர் பார்க் கியூன்-ஹைக்கு, நேற்று அந்நாட்டு கீழ் நீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து  தீர்ப்பு வழங்கியுள்ளது. இவர் அதிபராக இருந்த போது வர்த்தக நிறுவனங்களில் ஊழல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைதானார். இந்த வழக்கில் ஏற்கனவே அவருக்கு 24 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று ஓராண்டு காலத்துக்கு நீட்டிப்பு செய்து உத்தரவிட்டிருக்கிறது.
தீவிரவாத எதிர்ப்பு: இந்தியாவைப் பாராட்டும் அமெரிக்கா!

தீவிரவாத எதிர்ப்பு: இந்தியாவைப் பாராட்டும் அமெரிக்கா!

உலக அளவில் கடந்த ஆண்டு தீவிரவாத நிலை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது அமெரிக்க அரசு. அதில், சர்வதேச அளவில் தீவிரவாத எதிர்ப்பில் அமெரிக்கா உள்ளிட்ட கருத்து ஒருமித்த நாடுகளுடன் இந்தியா மிகவும் உறுதியுடன் ஒத்துழைப்பதாகக் கூறப்பட்டுள்ளது. தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் இந்தியா சிறப்புடன் செயல்பட்டு வருவதாகவும் அதில் பாராட்டியுள்ளது அமெரிக்கா.
தமிழகத் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

தமிழகத் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக காற்றின் வேகம் படிப்படியாக அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளட்து. இதையடுத்து சென்னை, கடலூர், புதுச்சேரி, நாகப்பட்டினம் உள்ளிட்ட துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர்: தமிழக அரசு அதிரடி!

11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர்: தமிழக அரசு அதிரடி!

தமிழகத்தில் 11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு முக்கியத் துறைகளைச் சேர்ந்த இந்த அதிகாரிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்படுவதாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அரசாணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more