Short News

அமெரிக்க அமைச்சர் வடகொரியா பயணம்!

அமெரிக்க அமைச்சர் வடகொரியா பயணம்!

அமெரிக்காவின்  வெளிறவுத்துறை அமைச்சர் மைக் பொம்பியோ  அரசுமுறை பயணமாக வடகொரியா செல்ல இருப்பதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிபர்  டிரம்பின்  சிறப்பு பிரதிநிதியாக செல்லும் அமைச்சர் வடகொரியாவின்  முக்கிய அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்த  இருப்பதாக  கூறப்படுகிறது.
கமல் ஒரு அரவேக்காடு- அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆவேசம்!

கமல் ஒரு அரவேக்காடு- அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆவேசம்!

மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆக முடியவில்லை என்ற விரக்தியிலும், கமல் அரசியல் தெரியாமல் அரவேக்காட்டுத்தனமாகவும் தமிழக அரசின் மீது குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆவேசமாக பேசியுள்ளார். மேலும் பேசிய அவர், கருணாஸ் மட்டுமல்ல அவதூறு பரப்பும் யாராக இருந்தாலும் சட்டம் தன் கடமையைச் செய்யும்" என்றார்.
கன்னியாஸ்திரி ரேப் வழக்கு: சில்மிஷ பிஷப் கைது?

கன்னியாஸ்திரி ரேப் வழக்கு: சில்மிஷ பிஷப் கைது?

கோட்டயம் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் கொச்சியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் பிஷப் பிராங்கோவிடம் 5 பேர் கொண்ட குழு 3வது நாளாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.நேற்று அவரிடம் 8 மணி நேரம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தது. இதைத்தொடர்ந்து இன்று நடத்தப்பட்ட விசாரணைக்கு பின் பிஷப் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன
மோடி முஸ்லிம் விதவைகளுக்கு வாதாடுகிறார்: பிரவின் தொகாடியா!

மோடி முஸ்லிம் விதவைகளுக்கு வாதாடுகிறார்: பிரவின் தொகாடியா!

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவார் என்ற நம்பிக்கையில் தான் மோடி ஆட்சியில் அமரவைக்கப்பட்டதாக பிரவின் தொகாடியா தெரிவித்துள்ளார். ராமர் கோவில் வக்கீலான மோடி இஸ்லாமிய விதவைகளுக்கு வாதாடுவதாகவும் பிரவின் தொகாடியா விமர்சித்துள்ளார். அக்டோபர் மாதம் 21ம் தேதி முதல் அயோத்தில் நடைப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தொகாடியா கூறியுள்ளார்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more