Short News

ஞாபக மறதி பெரும் பிரச்னையா இருக்கா? இத செய்ங்க

ஞாபக மறதி பெரும் பிரச்னையா இருக்கா? இத செய்ங்க

செய்து கொண்டிருக்கிற வேலையில் கவனம் செலுத்த முடியாமல், அடுத்து என்ன செய்வது என்ற திகைப்பு தோன்றினால் அல்லது கடந்த வாரம் நடந்த ஒரு நிகழ்ச்சியை அசைபோடும்போது, சம்மந்தப்பட்டவரின் முகம் நினைவுக்கு வந்தாலும் பெயர் ஞாபகம் வரவில்லையென்றால் முதுமையின் காரணமான மறதி வரப்போகிறது என்று நீங்களே உணர்ந்து கொள்ளலாம்.

சிக்கிம் மாநிலத்தின் முதல் ஏர்போர்ட் நாளை திறப்பு!

சிக்கிம் மாநிலத்தின் முதல் ஏர்போர்ட் நாளை திறப்பு!

சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் நாளை திறக்கப்படுகிறது. பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கவுள்ளார். சிக்கிம் மாநிலத்தை விமான போக்குவரத்துடன் இணைக்கும் நோக்கில், பாக்யாங் நகரில் புதிதாக விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 600 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தியாவின் 100வது விமான நிலையம் என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது.  
செல்போன் திருடியதாக சிறுவன் கொடூரமாக அடித்துக் கொலை!

செல்போன் திருடியதாக சிறுவன் கொடூரமாக அடித்துக் கொலை!

கரூர் மாவட்டம் அல்லாளிக் கவுண்டனூரைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் உயிரிழந்த நிலையல் அவரது மனைவி தனது 15 வயது மகனுடன் வசித்து வந்தார். சிறுவன், செல்போன் மற்றும் 3 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மர்மநபர்கள் சிறுவனின் வீட்டிற்குள் புகுந்து சிறுவனை கொடூரமாக அடித்து கொலை செய்துள்ளனர்.  இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜிவ்வுனு ஏறிய ஊட்டி ரயில் கட்டணம்: அக்.8 முதல் அமல்!

ஜிவ்வுனு ஏறிய ஊட்டி ரயில் கட்டணம்: அக்.8 முதல் அமல்!

யுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னம் என்ற அங்கீகாரம் அளிக்கப்பட்ட ஊட்டி மலை ரயிலின் கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்படுகிறது. மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை‌முதல் வகுப்பு கட்டணம் 195 ரூபாயில் இருந்து, 395 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. உயர்த்தப்பட்ட கட்டணம் அக்டோபர் மாதம் 8-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more