Short News

வரலட்சுமி விரதம் யாரெல்லாம் இருக்கலாம்? யார் இருக்கக்கூடாது?

வரலட்சுமி விரதம் யாரெல்லாம் இருக்கலாம்? யார் இருக்கக்கூடாது?

இந்த உலகத்தைக் காக்கின்ற தெய்வங்களில் ஒன்றாக, மகாலட்சுமி கருதப்படுகிறார். நாம் மனதுக்குள் நமக்குத் தேவையானதை வேண்டுகின்ற போது, அதை நமக்குக் கொடுக்கின்ற வரலட்சுமியாக இருப்பதால் தான் இந்த வரதத்துக்குக் வரலட்சுமி நோன்பு என்று பெயர் ஏற்பட்டது. லட்சுமிதேவி தேடி வந்து குடியேறும் நல்ல நாள் தான் வரலட்சுமி விரத நாளாகக் கொண்டாடப்படுகிறது.

சென்னை முழுக்க சி.சி.டி.வி.: போலீசார் முடிவு!

சென்னை முழுக்க சி.சி.டி.வி.: போலீசார் முடிவு!

சென்னை முழுவதும் சி.சி.டி.வி.க்களைப் பொருத்த முடிவு செய்துள்ளதாக மாநகரக் காவல் துறை ஆணையாளர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். 100 சதவிகிதம் சி.சி.டி.வி. கட்டுப்பாட்டில் வந்துள்ள சென்னை யானைக்கவுனி பகுதியில் உள்ள கேமரா கட்டுப்பாட்டு அறையைத் திறந்து வைத்துப் பேசுகையில் இத்தகவலை அவர் கூறியுள்ளார். சி.சி.டி.வி. பொருத்தப்பட்ட பின் குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளதாகவும் விஸ்வநாதன் கூறினார்.
அக்.2ல் இலவச சாஃப்ட்வேர்கள் வழங்கும் கேரள அரசு!

அக்.2ல் இலவச சாஃப்ட்வேர்கள் வழங்கும் கேரள அரசு!

மென்பொருள் சுதந்தர தினம் கொண்டாடப்படுவதையொட்டி, வரும் அக்டோபர் 2ஆம் தேதி இலவச மென்பொருள்கள் வழங்கும் திட்டத்தை கேரள அரசு அமல்படுத்த உள்ளது. ஆபரேடிங் சிஸ்டம், எம்.எஸ். ஆஃபீஸ், டி.டி.பி., கிராபிக்ஸ், வீடியோ&ஆடியோ எடிட்டிங், அனிமேசன், வெப் மற்றும் டேட்டாபேஸ் சர்வர் ஆகியவற்றுக்கான மென்பொருள்களை கேரள அரசு இலவசமாக வழங்கத் திட்டமிட்டுள்ளது.
என் கைகளில் உயிரை விட்ட என் தந்தை: கோலி உருக்கம்!

என் கைகளில் உயிரை விட்ட என் தந்தை: கோலி உருக்கம்!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி குறித்த ஆவணப் படம் ஒன்று இன்று இரவு 9 மணிக்கு 'நேஷனல் ஜியோகிராபிக்' தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த ஆவணப் படத்தில், தன் தந்தை நெஞ்சு வலியால் தன் கைகளிலேயே உயிரிழந்த தகவலை உருக்கத்துடன் பதிவு செய்துள்ளார் கோலி. கடந்த 2006ஆம் ஆண்டு அவர் டெல்லி அணிக்காக ரஞ்சிக் கோப்பையில் விளையாடியபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more