Short News

கருவில் இருக்கும் சிசு என்னென்ன சேட்டைகள் செய்யும் தெரியுமா?

கருவில் இருக்கும் சிசு என்னென்ன சேட்டைகள் செய்யும் தெரியுமா?

குழந்தைகள் என்றாலே அழகு தான். அவர்களுடைய சிரிப்பு, அழுகை, முக பாவனைகள், கொட்டாவி விடுதல் உறங்குவது என் அத்தனையுமே ஒருவித அழகு தான். ஆனால் கருவறைக்குள் இவற்றில் என்னென்ன செயல்களையெல்லாம் குழந்தைகள் செய்யும் உங்களுக்கு தெரியுமா? அழுகை, சிரிப்பு, புன்னகை, விக்கல்என பலப்பல.கருவில் இருக்கும் சிசு என்னென்ன சேட்டைகள் செய்யும் தெரியுமா?

4வது நாளாக தொடரும் யமஹா தொழிலாளர்கள் ஸ்டிரைக்!

4வது நாளாக தொடரும் யமஹா தொழிலாளர்கள் ஸ்டிரைக்!

காஞ்சிபுரம் அருகே ஒரகடத்தில் உள்ள யமஹா மோட்டார் வாகனத் தொழிற்சாலையில் சம்பள உயர்வு கேட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் 2 பேரை நீக்கம் செய்த விவகாரம் தொழிலாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் தொழிலாளர்களை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து 700க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொடர்ந்து 4ஆவது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிசான் விகாஸ் பத்ரா - என்பிஎஸ்: உங்கள் முதலீட்டு போர்ட்போலியோவிற்கு சிறந்தது எது?

கிசான் விகாஸ் பத்ரா - என்பிஎஸ்: உங்கள் முதலீட்டு போர்ட்போலியோவிற்கு சிறந்தது எது?

கிசான் விகாஸ் பத்ரா மற்றும் தேசிய சேமிப்புப் பத்திரம் உள்ளிட்ட சிறு சேமிப்புத் திட்டங்கள் மீதான அக்டோபர் - டிசம்பர் காலாண்டு வட்டி விகிதத்தினை மத்திய அரசு உயர்த்தி அறிவித்துள்ளது. தபால் நிலையங்களில் இருந்து இயங்கி வரும் இந்த நிரந்தர வருவாய் அளிக்கக் கூடிய சேமிப்புத் திட்டங்களில் உங்களுக்கு ஏற்றது எது என்று இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

திருப்பதி அருகே செம்மரம் வெட்ட சென்றதாக 7 தமிழர்கள் கைது!

திருப்பதி அருகே செம்மரம் வெட்ட சென்றதாக 7 தமிழர்கள் கைது!

ஆந்திரா மாநிலம் திருப்பதி அருகே செம்மரம் வெட்ட சென்றதாக 7 தமிழர்களை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இவர்கள் நேற்றிரவு சந்தேகத்துக்குரிய வகையில் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது 7 பேரை கைது செய்துள்ளனர். விசாரணையில் திருவண்ணாமலை, வேலூரை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more