Short News

தாமிர பாத்திரத்தில் நீர் குடித்தால் சர்க்கரை நோயாளியின் சர்க்கரை அளவு குறையுமா..?

தாமிர பாத்திரத்தில் நீர் குடித்தால் சர்க்கரை நோயாளியின் சர்க்கரை அளவு குறையுமா..?

ஒரு பக்கம் நோய்களின் எண்ணிக்கை அதிகரிக்க, மறுபக்கம் நோய்களுக்கான அரசியல் கட்டுக்கடங்காமல் செல்கிறது. 1980 எடுத்த சர்வேவை விட 2014-லில் 8.5 % சர்க்கரை நோயாளிகளின் அளவு உயர்ந்துள்ளது. இவற்றின் தாக்கம் எந்த அளவுக்கு உள்ளது என நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள். அந்த வகையில் தாமிர பாத்திரத்தில் குடித்தால் சர்க்கரை நோய்க்கு ஒரு தீர்வாக இருக்கும் என ஆய்வுகள் சொல்கிறது.

தங்கம் விலை அதிரடி குறைவு!

தங்கம் விலை அதிரடி குறைவு!

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றை விட இன்று ஒரு கிராமுக்கு ரூ.15 குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் தற்போது ஒரு கிராமுக்கு ரூ.2,935 ஆக விற்பனையாகிறது. ஒரு சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.23,480 ஆகும். 24 கேரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.30,820க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.40.10 ஆகும். ஒரு கிலோ வெள்ளிக் கட்டி ரூ.40,100 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
மக்கள் நீதி மய்யத்திற்கு 4 இடங்களில் தலைமை அலுவலகம்!

மக்கள் நீதி மய்யத்திற்கு 4 இடங்களில் தலைமை அலுவலகம்!

ஒரு கட்சியின் தலைமை அலுவலகம் ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்ற மரபை உடைத்துள்ளது நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம். இக்கட்சியின் தலைமை அலுவலகம் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் அமைய உள்ளது. இந்த 4 அலுவலகங்களுக்கும் கமல் நேரடியாகச் சென்று கட்சிப் பொறுப்பாளர்களையும் பொதுமக்களையும் சந்திப்பார்.
உலகிலேயே இரண்டாவது மோசமான வங்கிகள் இந்திய வங்கிகள் - ப்ளூம்பெர்க் காரசாரம்.!

உலகிலேயே இரண்டாவது மோசமான வங்கிகள் இந்திய வங்கிகள் - ப்ளூம்பெர்க் காரசாரம்.!

அப்போது முதல் இடம் யார் என்று கேட்கிறீர்களா...? இத்தாலி. வங்கிகளின் பேலன்ஸ் ஷீட்டில் இருக்கும் வாராக் கடன்கள், பிரச்னைக்குரிய கடன்களை கணக்கில் எடுத்துக் கொண்டு இதைக் கணக்கிட்டு இருக்கிறார்கள்.ஒரு வங்கியின் முதல் அடிப்படைப் பணியே, தேவையானவர்களுக்குக் கடன் கொடுத்து அதை வட்டியோடு ஒழுங்காக வசூலிப்பது. இந்த விஷயத்தில் இந்திய வங்கிகளைப் பற்றி நாம் அதிகம் பேச வேண்டியதில்லை.

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more