Short News

குவியும் புக்கிங்.. தேவையை சமாளிக்க டிவிஎஸ் எடுத்த முடிவு

குவியும் புக்கிங்.. தேவையை சமாளிக்க டிவிஎஸ் எடுத்த முடிவு

இரண்டு சக்கர வாகன சந்தையில் மிக வேகமாக வளர்ந்து வரும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் எதிர்கால சந்தை தேவைகளை கருத்தில்கொண்டு, வாகன உற்பத்தியை கணிசமாக உயர்த்த முடிவு செய்துள்ளது. இருசக்கர வாகன சந்தையில் மூன்றாவது இடத்தில் இருந்த டிவிஎஸ் தற்போது ஹீரோ, ஹோண்டாவுக்கு இணையாக சந்தையை வளர்த்தெடுத்துள்ளது.
விரைவில் அறிமுகமாகிறது ஹூண்டாயின் குட்டி எலெக்ட்ரிக் எஸ்யூவி

விரைவில் அறிமுகமாகிறது ஹூண்டாயின் குட்டி எலெக்ட்ரிக் எஸ்யூவி

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஹூண்டாய் நிறுவனம் தனது சிறிய வகை ஸஎலெக்ட்ரிக் எஸ்யூவியை விரைவில் அறிமுகம் செய்யத் தயாராகி வருகிறது. ஏற்கனவே கிரெட்டா எலெக்ட்ரிக் மற்றும் ஐயோனிக் 5 ஆகிய கார்களை விற்பனை செய்து வரும் ஹூண்டாய், அதிகம் விற்பனையாகும் குறைவான விலை எலெக்ட்ரிக் கார் மார்க்கெட்டில் களம் புகம் உள்ளது.
நவம்பரில் இந்தியாவில் அறிமுகமாகும் புதிய கார்கள்!

நவம்பரில் இந்தியாவில் அறிமுகமாகும் புதிய கார்கள்!

பண்டிகை காலத்தையொட்டி கடந்த இரு மாதங்களாக ஏராளமான புதிய கார் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், வரும் நவம்பரிலும் பல புதிய கார் மாடல்கள் இந்திய சந்தையில் களமிறங்க வரிசை கட்டி இருக்கின்றன.
சேத்தக் உற்பத்தியை கணிசமாக உயர்த்தும் பஜாஜ் ஆட்டோ!!

சேத்தக் உற்பத்தியை கணிசமாக உயர்த்தும் பஜாஜ் ஆட்டோ!!

சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு தொடர்ந்து அதிக டிமாண்ட் இருந்து வருகிறது. இந்தியாவின் மின்சார ஸ்கூட்டர் மார்க்கெட்டில் டிவிஎஸ் ஐக்யூப் ஸ்கூட்டருக்கு அடுத்து விற்பனையில் இரண்டாவது இடத்தில் பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்தான் உள்ளது. இந்த நிலையில், தேவையை சமாளிக்கும் விதமாக சேத்தக் உற்த்தியை கணிசமாக உயர்த்த பஜாஜ் ஆட்டோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போது மாதத்திற்கு அதிகபட்சமாக 62,000 ஸ்கூட்டர்களை தயாரிக்கும் திறன் இருக்கும் நிலையில், இதனை மாதத்திற்கு 80,000 யூனிட்டுகளாக உயர்த்த பஜாஜ் ஆட்டோ இலக்கு நிர்ணயித்துள்ளது.