Short News

ஸ்பிளென்டர், டீலக்ஸ் Flex Fuel பைக்குகளுக்கு 10,000 புக்கிங்

ஸ்பிளென்டர், டீலக்ஸ் Flex Fuel பைக்குகளுக்கு 10,000 புக்கிங்

இந்தியாவில் பெட்ரோலுக்கு மாற்றாக எத்தனால் கலந்த எரிபொருளை பயன்படுத்தும் வாகனங்களுக்கு வரவேற்பு மெல்ல அதிகரித்து வருகிறது. அந்த வகையில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய முயற்சிக்கு ஆரம்பத்திலேயே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட தனது E85 ஃப்ளெக்ஸ் ஃபியூவல் பைக்குகளுக்கு இதுவரை 10,000 புக்கிங்குகள் கிடைத்துள்ளதாக ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்துள்ளது.
XEV 9S எலெக்ட்ரிக் காரில் Range Extender தொழில்நுட்பம்!

XEV 9S எலெக்ட்ரிக் காரில் Range Extender தொழில்நுட்பம்!

இந்தியாவில் எலெக்ட்ரிக் எஸ்யூவி சந்தை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், நீண்ட தூரப் பயணங்களில் எலெக்ட்ரிக் கார்களுக்கு இருக்கும் முக்கிய சவாலான ரேஞ்ச் கவலையை சமாளிக்க மஹிந்திரா புதிய வழியை பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மஹிந்திரா நிறுவனம் தனது INGLO தளத்தில் உருவாக்கப்பட்ட எக்ஸ்இவி 9எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கு கூடுதல் ரேஞ்ச் வழங்கும் Range Extender தொழில்நுட்பத்தை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ரூ.1.95 கோடியில் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், i7 ஃபேஸ்லிஃப்ட்!

ரூ.1.95 கோடியில் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், i7 ஃபேஸ்லிஃப்ட்!

இந்தியாவின் ஆடம்பர கார் சந்தையில் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார் முக்கிய மாடலாக இருந்து வருகிறது. இந்த நிலையில், டிசைன், வசதிகள் என அனைத்து விதத்திலும் மேம்படுத்தப்பட்ட 7 சீரிஸ் செடான் சொகுசு காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இன்று இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அத்துடன் 7 சீரிஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனான ஐ7 காரும் இன்று விற்பனைக்கு வந்துள்ளது.
ஒரே சார்ஜில் 936 கிமீ பயணித்த ஸ்கோடாவின் EV கார்!

ஒரே சார்ஜில் 936 கிமீ பயணித்த ஸ்கோடாவின் EV கார்!

எலெக்ட்ரிக் கார்களின் ரேஞ்ச் குறித்த எதிர்பார்ப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் ஸ்கோடா நிறுவனம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. அந்நிறுவனத்தின் புதிய 7 சீட்டர் எலெக்ட்ரிக் எஸ்யூவியான ஸ்கோடா பீக் 90 (Škoda Peaq 90) அண்மையில் நடத்தப்பட்ட சோதனையின்போது பேட்டரி ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், 936 கிமீ பயணித்து புதிய சாதனைப் படைத்துள்ளது.