Short News

காலை உணவாக பால் குடிப்பது சரியா? அப்ப வேற எப்போ குடிக்கணும்?

காலை உணவாக பால் குடிப்பது சரியா? அப்ப வேற எப்போ குடிக்கணும்?

நமது வீடுகளில் நம் அம்மாக்கள் எப்பொழுதும் நம்மளிடம் தினமும் ஒரு பெரிய டம்ளர் பால் குடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது உண்டு. அதற்கு காரணம், இது குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருவருக்கும் ஒரு முழுமையான மற்றும் அத்தியாவசிய உணவாக கருதப்படுகிறது. அதில் நிறைய கதைகளும் இருக்கின்றன. காலை உணவாக பால் குடிப்பது சரியா? அப்ப வேற எப்போ குடிக்கணும்?

தமிழகத் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

தமிழகத் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக காற்றின் வேகம் படிப்படியாக அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளட்து. இதையடுத்து சென்னை, கடலூர், புதுச்சேரி, நாகப்பட்டினம் உள்ளிட்ட துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர்: தமிழக அரசு அதிரடி!

11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர்: தமிழக அரசு அதிரடி!

தமிழகத்தில் 11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு முக்கியத் துறைகளைச் சேர்ந்த இந்த அதிகாரிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்படுவதாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அரசாணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 9.119 கன அடியிலிருந்து 9,096 கன அடியாகக் குறைந்துள்ளது. அணையின் தற்போதைய நீர்மட்டம் 109.73 அடி; நீர் இருப்பு 78.02 டி.எம்.சி. ஆகும். டெல்டா பாசன வசதிக்காக அணையிலிருந்து நொடிக்கு 22,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. கிழக்கு மற்றும் மேற்குக் கால்வாய் பாசனத்திற்காக அணையிலிருந்து வழக்கம்போல் நொடிக்கு 800 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more