Short News

ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிப்பது ஆரோக்கியமானது?

ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிப்பது ஆரோக்கியமானது?

ஒரு நாளைக்கு எட்டு முதல் ஒன்பது முறை சிறுநீர் கழிப்பது ஆரோக்கியமானது என மருத்துவர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக ஒருவர் குறைந்தது 2 லிட்டர் நீர் குடித்தே தீர வேண்டும் அல்லது உடலின் எடைக்கு ஏற்ப நீரை குடிக்கும் அளவை ஏற்றுவதும் குறைப்பதும் இருக்க வேண்டும். குறைந்த அளவு நீரை குடிப்பதன் மூலம் உடலில் சோடியத்தன் அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
ஆசிய கோப்பை: ஹாங் காங்கிற்கு 286 ரன்கள் இலக்கு!

ஆசிய கோப்பை: ஹாங் காங்கிற்கு 286 ரன்கள் இலக்கு!

துபாயில் ஆசிய கோப்பை தொடரின் 4வது லீக் போட்டி ஹாங் காங்- இந்திய அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 127 ரன்களும், அம்பதி ராயுடு 60 ரன்களும் விளாசினர்.
ஆசியா கோப்பை: தோனி டக்-அவுட்! இந்தியா - 252/5 (43)

ஆசியா கோப்பை: தோனி டக்-அவுட்! இந்தியா - 252/5 (43)

துபாயில் ஆசிய கோப்பை தொடரின் 4வது லீக் போட்டி ஹாங் காங்- இந்திய அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்து வரும் இந்தியா, 42 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது. இதில் முன்னாள் கேப்டன் தோனி டக்-அவுட்டாகி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். இதில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 127 ரன்கள் குவித்து அவுட்டாகியுள்ளார்.
கடம்பூர் ராஜூவுக்கு பதிலடி கொடுத்த துரைமுருகன்!

கடம்பூர் ராஜூவுக்கு பதிலடி கொடுத்த துரைமுருகன்!

மெரினாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்கப்பட்டது அதிமுக அரசு போட்ட பிச்சை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன், "மெரினாவில் இடத்தை அரசு ஒதுக்கி இருந்தால் பிச்சை, நீங்கள்தான் ஒதுக்கவே இல்லையே, அமைச்சருக்கான தகுதி, கன்னியத்தை மறந்து கடம்பூர் ராஜூ பேசியிருக்கிறார்" என்றார்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more