Short News

ஜனவரியில் வருகிறது ஹூண்டாய் பேயான் சிஎன்ஜி கார்!

ஜனவரியில் வருகிறது ஹூண்டாய் பேயான் சிஎன்ஜி கார்!

ஹூண்டாய் பேயான் எஸ்யூவியின் சிஎன்ஜி (CNG) மாடல் வரும் ஜனவரி மாதம் அறிமுகமாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று பெட்ரோல் எஞ்சின் தேர்வில் மட்டும் விற்பனைக்கு வந்துள்ள பேயான் காரில், சிஎன்ஜி வசதியும் சேர்க்கப்படுவது எரிபொருள் செலவைக் குறைக்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக மாறும்.
வாகனங்களுக்கான E100 எத்தனால் எரிபொருளுக்கு அனுமதி!

வாகனங்களுக்கான E100 எத்தனால் எரிபொருளுக்கு அனுமதி!

பெட்ரோலுக்கு மாற்றாக எத்தனால் பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சியில் மத்திய அரசு முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன்படி, 100 சதவீத எத்தனால் கொண்ட E100 எரிபொருளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த எரிபொருள் பயன்படுத்தும் ஃப்ளெக்ஸ் ஃபியூல் வாகனங்களுக்கு ஏற்றவாறு மோட்டார் வாகன விதிமுறைகளும் திருத்தப்பட்டுள்ளன.
அடுத்த கட்டத்திற்கு செல்லும் ஓட்டுனர் உரிமம் பெறும் நடைமுறை!

அடுத்த கட்டத்திற்கு செல்லும் ஓட்டுனர் உரிமம் பெறும் நடைமுறை!

இந்தியாவில் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான விதிகளில் முக்கிய மாற்றங்களைக் கொண்டுவர மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989-ல் திருத்தங்களை மேற்கொள்வதற்கான வரைவு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதோ வந்துவிட்டது புதிய ஹூண்டாய் பேயான் எஸ்யூவி!

இதோ வந்துவிட்டது புதிய ஹூண்டாய் பேயான் எஸ்யூவி!

இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கான போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஹூண்டாய் நிறுவனம் தனது புதிய பேயான் (Hyundai Bayon) எஸ்யூவியை சற்றுமுன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த காருக்கு ரூ.9.99 லட்சம் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.