Short News

எடையை குறைக்க முயற்சி பண்றீங்களா? இந்த மைனஸ் கலோரி உணவுகளை சாப்பிடுங்க.

எடையை குறைக்க முயற்சி பண்றீங்களா? இந்த மைனஸ் கலோரி உணவுகளை சாப்பிடுங்க.

உடல் எடையை குறைப்பதற்குள் நமக்கு போதும் போதும் என்றாகி விடும். நாம் பின்பற்றாத வழிமுறைகளே இருக்காது. அதிலும் டயட் மேற்கொண்டால் போதும் ஒவ்வொரு உணவின் கலோரியையும் எண்ணிக் கொண்டே தான் சாப்பிடவே செய்வோம். இந்த டயட் திட்டமும், உடற்பயிற்சியும் உடல் எடையை குறைப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறதுஎடையை குறைக்க முயற்சி பண்றீங்களா? இந்த மைனஸ் கலோரி உணவுகளை சாப்பிடுங்க.

வருமானவரி தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு!

வருமானவரி தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு!

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய கடைசி நாள் செப்டம்பர் 30ம் தேதி என்றிருந்த நிலையில், தற்போது அக்டோபர் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 15ம் தேதியை கடந்து தங்களது வரியை செலுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் வருமானவரித்துறை வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை: ராகுல்!

நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை: ராகுல்!

ரஃபேல் போர் விமான வாங்கியது தொடர்பான விவகாரத்தை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்தால் உண்மைகள் வெளிவரும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். முன்னதாக சமாஜ்வாதியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் இதே கோரிக்கை முன்வைத்து குறிப்பிடத்தக்கது.
கருணாஸ் கைது: சபாநாயகர் தனபால் கடிதம்!

கருணாஸ் கைது: சபாநாயகர் தனபால் கடிதம்!

திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது செய்யப்பட்டது தொடர்பாக அனைத்து எம்எல்ஏக்களுக்கும் சபாநாயகர் கடிதம் அனுப்பியுள்ளார். சர்ச்சைக்குள்ளான முறையில் பேசியதால் கருணாஸ் கைது செய்யப்பட்டுள்ளதாக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் தனபால் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தகவல் தெரிவிக்கும் வகையில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more