Short News

சர்க்கரை நோயாளிகளுக்கு மாரடைப்பு வருமா? உண்மை என்ன?

சர்க்கரை நோயாளிகளுக்கு மாரடைப்பு வருமா? உண்மை என்ன?

நீரிழிவு நோய் என்பது இப்பொழுது வயசு வித்தியாசம் இல்லாமல் எல்லாரையும் தாக்கி வருகிறது. இந்த நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே இருக்கிறது. இந்த நீரிழிவு நோயால் இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் போன்றவற்றையும் மக்கள் சந்திக்கின்றனர். சர்க்கரை நோயாளிகளுக்கு மாரடைப்பு வருமா? உண்மை என்ன?

வேலூர், சேலம் சிறைகளிலிருந்து 63 ஆயுள் கைதிகள் விடுதலை!

வேலூர், சேலம் சிறைகளிலிருந்து 63 ஆயுள் கைதிகள் விடுதலை!

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருவதையொட்டி, தமிழக சிறைகளிலுள்ள ஆயுள் தண்டனைக் கைதிகள் பலரும் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், வேலூர் சிறையிலிருந்து 3 பெண்கள் உள்பட 32 ஆயுள் கைதிகளும் சேலம் சிறையிலிருந்து 31 ஆயுள் கைதிகளும் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை 10:10க்கு உங்கள் ஊர்களில் வெப்பநிலை!

இன்று காலை 10:10க்கு உங்கள் ஊர்களில் வெப்பநிலை!

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இன்று காலை 10.10 மணிக்குப் பதிவான வெப்பநிலை அளவுகள் (டிகிரி செல்சியஸில்) பின்வருமாறு: சென்னை-31; மதுரை-30; கோயம்புத்தூர்-28; திருச்சி-32; திருநெல்வேலி-31; திண்டுக்கல்-26; ஈரோடு-28; சேலம்-28; சிவகாசி-31; தஞ்சாவூர்-31; தூத்துக்குடி-31; திருப்பூர்-29; வேலூர்-28; ஊட்டி-17; கொடைக்கானல்-18; ஏற்காடு-22; ஏலகிரி-27; வேடந்தாங்கல்-30.
சாதாரண விமானத்தில்தான் பயணிப்பேன்: புதிய மெக்ஸிகோ அதிபர் அசத்தல்!

சாதாரண விமானத்தில்தான் பயணிப்பேன்: புதிய மெக்ஸிகோ அதிபர் அசத்தல்!

மெக்ஸிகோவின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மானுவல் லோபஸ் ஒபராடோ, வரும் டிசம்பர் மாதத்தில் பதவியேற்க உள்ளார். அதிபருக்கான தனி விமானத்தை விற்க முடிவு செய்துள்ள அவர், இனி பயணிகள் விமானத்தில் மட்டுமே பயணிப்பேன் என அதிரடியாகக் கூறியுள்ளார். சமீபத்தில் கனமழை காரணமாக, ஒரு பயணிகள் விமானத்தில் 3 மணி நேரம் வரை அவர் சிக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more