Short News

ஏசியன் கேம்ஸ்: 6 தங்கங்கள் வென்று அசத்திய ஜப்பான் நீச்சல் வீராங்கனை!

ஏசியன் கேம்ஸ்: 6 தங்கங்கள் வென்று அசத்திய ஜப்பான் நீச்சல் வீராங்கனை!

இந்தோனேசியாவில் நடந்து வரும் 18ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பல்வேறு நீச்சல் பிரிவுகளில் 6 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார் ஜப்பான் நாட்டின் ரிகாகோ இகீ. 18 வயதே ஆன அவர், இதன் மூலம் ஒரே ஆசிய விளையாட்டுத் தொடரில் 6 தங்கப் பதக்கங்கள் வென்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இந்த ஆசியப் போட்டியில், நீச்சலில் மட்டும் ஜப்பான் 9 தங்கங்கள் உள்பட 52 பதக்கங்களைக் குவித்துள்ளது!
ராகுலை விரும்பும் பாக்.!

ராகுலை விரும்பும் பாக்.!

காங்., தலைவர் ராகுல் இந்தியாவில் பிரதமராக வேண்டும் என பாகிஸ்தான் விரும்புவதாக பா.ஜ., செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்தார். இவர் நிருபர்களிடம் மேலும் கூறியதாவது:ரபேல் விவகாரத்தில் எந்த தவறும் நடக்கவில்லை. ஆனால் பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என ராகுலும், பாகிஸ்தானும் விரும்புகிறது. மோடியை
சாய்னாவாக ஸ்ரத்தா கபூர்!

சாய்னாவாக ஸ்ரத்தா கபூர்!

பிரபல இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் வாழ்க்கை வரலாறு படத்தில் ஸ்ரத்தா கபூர் நடித்திருக்கிறார். இதற்கான பல மாதங்கள் ஸ்ரத்தா கபூர் பேட்மிண்டன் விளையாட்டை முறைக்கப்படி கற்றுக்கொண்டுள்ளார். அமொலே குப்தே இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடந்து வருகிறது.
முதல் பட சம்பளத்தை கேரளாவுக்குக் கொடுத்த துருவ்!

முதல் பட சம்பளத்தை கேரளாவுக்குக் கொடுத்த துருவ்!

பாலா இயக்கத்தில் 'வர்மா' படத்தின் மூலம் அறிமுகமாகி நடித்துள்ளார் விக்ரமின் மகனான துருவ். இந்தப் படத்திற்காகக் கிடைத்த முழுச் சம்பளத்தையும் அவர் கேரள வெள்ள நிவாரண நிதிக்காக அளித்துள்ளார். திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து இந்த நிதியை அளித்துள்ளார் துருவ். அவருடைய இச்செயலைப் பலதரப்பினரும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more