Short News

ஏசியன் கேம்ஸ்: சாய்னா நேவாலுக்கு வெண்கலம் உறுதி!

ஏசியன் கேம்ஸ்: சாய்னா நேவாலுக்கு வெண்கலம் உறுதி!

இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் 18வது ஆசிய விளையாட்டுப் போட்டி மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில் இன்று நடந்த காலிறுதி போட்டியில் தாய்லாந்து வீராங்கனை ரட்சனோக் இன்டானனை வீழ்த்தி இந்தியாவின் சாய்னா நேவால் அரையிறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் அவருக்கு வெண்கல பதக்கம் உறுதியாகியுள்ளது. இதுவரை இந்தியா, 7 தங்கம், 5 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்களை இந்தியா கைப்பற்றியுள்ளது
ஆசியா கோப்பை: தோனி டக்-அவுட்! இந்தியா - 252/5 (43)

ஆசியா கோப்பை: தோனி டக்-அவுட்! இந்தியா - 252/5 (43)

துபாயில் ஆசிய கோப்பை தொடரின் 4வது லீக் போட்டி ஹாங் காங்- இந்திய அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்து வரும் இந்தியா, 42 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 24 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது. இதில் முன்னாள் கேப்டன் தோனி டக்-அவுட்டாகி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். இதில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 127 ரன்கள் குவித்து அவுட்டாகியுள்ளார்.
கடம்பூர் ராஜூவுக்கு பதிலடி கொடுத்த துரைமுருகன்!

கடம்பூர் ராஜூவுக்கு பதிலடி கொடுத்த துரைமுருகன்!

மெரினாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்கப்பட்டது அதிமுக அரசு போட்ட பிச்சை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன், "மெரினாவில் இடத்தை அரசு ஒதுக்கி இருந்தால் பிச்சை, நீங்கள்தான் ஒதுக்கவே இல்லையே, அமைச்சருக்கான தகுதி, கன்னியத்தை மறந்து கடம்பூர் ராஜூ பேசியிருக்கிறார்" என்றார்.
ஆசியா கோப்பை: சதம் விளாசிய தவான்!

ஆசியா கோப்பை: சதம் விளாசிய தவான்!

துபாயில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 4வது லீக் போட்டி ஹாங் காங்- இந்திய அணிகள் விளையாடி வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்து வரும் இந்தியா, 39 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது. இதில் ஷிகர் தவான் 105 பந்துகளில் சதம் விளாசினார். தற்போது தவான்(125) மற்றும் தினேஷ்(18) கார்த்திக் தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more